தென்றல் வந்து என்னை தொடும் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சுடர் மற்றும் வெற்றி இருவரும் கொடைக்கானலில் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்க, சிலர் வந்து வெற்றியிடம் இந்த குழந்தையை கடத்திக் கொண்டு வந்து விட்டாயா? என்று கேட்கின்றனர். அப்போது சிறிதும் யோசிக்காத சுடர் இது என்னுடைய அப்பா என்று பதில் அளிக்கிறார். இதனால் வெற்றி நெகிழ்ந்து போயிருக்கிறார். அந்த அழகான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியின் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் கதாநாயகனாக நடிகர் வினோத் பாபு வெற்றி என்கிற கதாபாத்திரத்திலும், கதாநாயகியாக நடிகை பவித்ரா ஜனனி அபி என்கிற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். மிகப் பெரிய ரௌடியாக இருக்கும் வெற்றி அபியின் கழுத்தில் தாலி கட்டி விடுகிறார். பின்னர் அபியும் வெற்றியும் இணைந்து வாழ்கின்றனரா? இல்லையா? என்பது குறித்த கதை தான் தென்றல் வந்து என்னை தொடும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கதை முடியும் தருவாயில் இருந்த நிலையில் தற்போது இயக்குனர் கதையை வேறு களத்திற்கு மாற்றி இருக்கிறார். தற்போது அபிக்கும் வெற்றிக்கும் பிறந்த சுடர் என்கிற குழந்தையை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர். சுடர் வெற்றிக்கு பிறந்த குழந்தை இல்லை என்று வெற்றியின் மனதை சிலர் மாற்றி வைத்திருக்கின்றனர். ஆனால் வெற்றியோ தனக்கும் அபிக்கும் பிறந்த குழந்தைதான் சுடர் என்பதை தீர்க்கமாக நம்புகிறார். அதை எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என்று சொல்லி அபி ஐஏஎஸ் படிக்க ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்ற கிராமத்திற்கு செல்கிறார். அந்த கிராமத்தில் தான் சுடர் பிறந்ததால் அங்கு இருக்கும் அரசு அலுவலகத்தில் ரெக்காடுகளை தேடிச் செல்கிறார். அப்போது அவருக்கு சுடர் தனக்கும் அபிக்கும் பிறந்த குழந்தைதான் என்ற உண்மை தெரிய வருகிறது. நெகிழ்ச்சியான அந்த தருணங்கள் தற்போது இன்னும் மகிழ்ச்சியாக மாறியிருக்கிறது. சுடரை அழைத்துக் கொண்டு வெற்றி தற்போது கொடைக்கானலுக்கு டூர் கூட்டி சென்று இருக்கிறார்.

ஒருபுறம் வெற்றி தன் மகளை கடத்தி விட்டதாக அபி கோபப்பட்டு கொண்டிருக்க, சிலர் வெற்றியிடம் வந்து இந்த குழந்தை யார் நீ கடத்திக் கொண்டு வந்து விட்டாயா என்று கேள்வி எழுப்புகின்றன. அப்போது சிறிதும் தயங்காத சுடர் இது தன்னுடைய தந்தை என்று கூறுகிறார். இதனால் வெற்றியும் நெகிழ்ந்து போயிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television