சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஆதிரையின் கையைப் பிடித்து தரதரவென இழுத்துச் செல்லும் ஜான்சி ராணியை ஆதி குணசேகரனின் மகள் தர்ஷினி “இப்போ நீ வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்றால், நான் போலீசுக்கு போன் செய்வேன்” என்று சொல்லி மிரட்டுகிறார். அந்த அதிரடியான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. நாளுக்கு நாள் ஏதாவது ஒரு சண்டையுடன் எதிர்நீச்சல் சீரியல் கதை நகர்ந்து வருகிறது. தற்போது கதைப்படி ஆதி குணசேகரனின் மூத்த தம்பியாக இருக்கும் ஞானத்தின் மகள் ஐஸ்வர்யா பருவம் எய்தியிருக்கிறார். ஆனால் வீட்டில் நடக்கும் சண்டை காரணமாக அவர் இத்தனை நாட்கள் தான் வயதிற்கு வந்த விஷயத்தை வீட்டில் உள்ள யாரிடமும் சொல்லாமல் இருக்கிறார். இந்த நிலையில் நேற்று அவரை சாமி முன்பாக நின்று மருமகள் அனைவரும் சேர்ந்து விளக்கேற்ற வைத்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஐஸ்வர்யா ரேணுகாவிடம் தான் அரசு பள்ளியில் சென்று படிக்க விரும்புகிறேன், எனக்கு எனது தந்தை பீஸ் கட்டினால் பரவாயில்லை, பெரியப்பா தான் பீஸ் கட்டுகிறார், அவர் தினமும் அதை சொல்லிக் காட்டுவது எனக்கு விருப்பமில்லை, என்னுடைய தாய் மொழி தமிழ் தானே, அதனால் நான் தமிழ் மொழியில் படிக்க விரும்புகிறேன், நான் பரீட்சைக்காக படிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை, புரிந்து படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் கூறிக் கொண்டிருக்கிறார். இது ஒரு புறம் இருக்க, மற்றொருபுறம் ஜான்சி ராணி இனி ஒன்றும் வேலைக்காகாது என்று சொல்லி ஆதிரையின் கையைப் பிடித்து இழுத்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்கிறார். அப்போது ஆதி குணசேகரனின் மகள் தர்ஷினி “இப்போ வெளியே போறீங்களா? இல்லனா போலீசுக்கு போன் பண்ணுவேன் என்று கூறி மிரட்டுகிறார். அப்போது கரிகாலன் இவங்க நிஜமாலுமே செய்தாலும் செய்வாங்க என்று புலம்புகிறார்.

மேலும் இவங்க ஆதி குணசேகரன் மாதிரி இல்ல, அவரு தான் வெறும் வாயிலேயே வடை சுடுவார் என்று கரிகாலன் கூறிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஆதி குணசேகரன் மாடியில் இருந்து கீழே இறங்கி வருகிறார். இவ்வாறாக இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. கரிகாலனை வேண்டாம் வெறுப்பாக திருமணம் செய்து கொள்ளும் ஆதிரை, மீண்டும் ஜான்சிராணி வீட்டிற்கு செல்வாரா? இல்லை ஆதி குணசேகரன் வீட்டிலேயே தங்கி விடுவாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Sun TV