ஆக்ஷனில் பட்டையை கிளப்பி இருக்கும் அருண் விஜய், எமி ஜாக்சன்.! மிஷன் சாப்டர் 1 படத்தில் இருந்து புது வீடியோ!

நடிகர் அருண் விஜய் மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் ஆக்ஷன் பிளாக் திரைப்படமாக உருவாக்கி வரும் திரைப்படம் தான் மிஷன் சாப்டர் ஒன்: அச்சம் என்பது இல்லையே. தற்போது இந்த திரைப்படத்திலிருந்து மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். பிரபல பழம்பெரும் நடிகர விஜய குமாரின் மகன் தான் அருண் விஜய். இவர் 1995 ஆம் ஆண்டு வெளியான “முறை மாப்பிள்ளை” என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானார். பின்னர் சில படங்களில் மட்டுமே நடித்த அவருக்கு 2001 ஆம் ஆண்டு வெளியான பாண்டவர் பூமி திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் இவர் இயற்கை, ஜனனம் போன்ற பல படங்களில் நடித்தார். நீண்ட இடைவேளைக்குப் பின்னர் இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான தடையறத் தாக்க என்கிற படத்தின் மூலமாக மீண்டும் திரையுலகுக்கு ரீ என்ட்ரி கொடுத்தார். சில ஆண்டுகள் கழித்து வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து மீண்டும் தான் ஒரு நல்ல நடிகர் என்பதை நிரூபித்து இருந்தார் அருண் விஜய். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆக்ஷனில் பட்டையை கிளப்பி இருக்கும் அருண் விஜய், எமி ஜாக்சன்.! மிஷன் சாப்டர் 1 படத்தில் இருந்து புது வீடியோ! 1
பின்னர் இவர் செக்கச் சிவந்த வானம், தடம், ஓ மை டாக், யானை, சினம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் பார்டர், மிஷன் சாப்டர் ஒன்: அச்சம் என்பது இல்லையே, வணங்கான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சூர்யா நடிக்க இருந்த வணங்கான் படத்திலிருந்து அவர் விலகிய காரணத்தினால் அந்த ரோலில் தற்போது அருண் விஜய் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் தமிழ் ராக்கர்ஸ் என்கிற வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார். தற்போது இவர் நடித்து வரும் மிஷன் சாப்டர் ஒன்: அச்சம் என்பது இல்லையே என்பது ஆக்‌ஷன் த்ரில்லர் கலந்த படமாக இருந்து வருகிறது. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்க, சுபாஷ்கரனின் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், பரத் போபண்ணா, பேபி இயல், அபி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் தனது மகளின் மருத்துவ ஆபரேஷனுக்காக லண்டனுக்கு செல்லும் ஒரு இந்தியன் சிறையில் அடைக்கப்படுகிறான்.
ஆக்ஷனில் பட்டையை கிளப்பி இருக்கும் அருண் விஜய், எமி ஜாக்சன்.! மிஷன் சாப்டர் 1 படத்தில் இருந்து புது வீடியோ! 3
பின்னர் அவன் எவ்வாறு சிறையில் இருந்து தப்பித்து வெளியே வருகிறான் என்பது குறித்த படம் தான்்இந்த திரைப்படத்தின் மையக்கதையாக இருக்கிறது. இந்த திரைப்படம் விரைவில் திரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இந்த படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இந்த படம் மே மாதமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் வெளியீடு தள்ளிக் கொண்டு செல்கிறது. இந்த நிலையில் புதிய மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..! 

Youtube Video Embed Code Credits: Lyca Productions
விளம்பரம்

Leave a Comment