இயக்குனர் சுந்தர் சி தற்போது போலீசாக நடித்திருக்கும் வல்லான் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இந்த ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. திரையுலகில் இயக்குனராக இருந்து பின்பு நடிகராக மாறியவர் இயக்குனர் சுந்தர் சி. தற்போது இவர் நடிப்பது, படங்களை இயக்குவது, படங்களை தயாரிப்பது என்று பன்முக திறமையாளராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒருபுறம் படங்களை இயக்குவதில் பிஸியாக இருக்கும் போதிலும், தனது மனைவி குஷ்பூ உடன் இணைந்து அவ்னி சினி மேக்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அவருடைய நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் “வல்லான்”. இரண்டு வாரங்களுக்கு முன்பு இவர் நடிப்பில் வெளியாகி இருந்த தலைநகரம் 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதற்கு அடுத்தபடியாக இயக்குனர் விஆர் மணி செய்யோன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வல்லான் படத்தில் சுந்தர் சி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்திருக்கிறார். ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் பிக் பாஸ் பிரபலம் அபிராமி வெங்கடாசலம், ஹேபா பட்டேல், அமித் பார்கவ், கமல் காமராஜ், சாந்தினி தமிழரசன், விஜய் தொலைக்காட்சியின் டி எஸ் கே, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். டாக்டர் வி.ஆர் மணிகண்ட ராமன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். வி ஆர் டெல்டா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் இந்த படத்தை அவர் தயாரித்திருக்கிறார். மேலும் சந்தோஷ் தயாநிதி என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது இது ஒரு பக்கா க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சுந்தர் சி ஒரு போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். ஒரு கொலைக்கான காரணத்தை பல்வேறு கோணங்களில் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். மேலும் கொலையானவர்களின் குடும்ப உறுப்பினர்களையே அவர் சந்தேக்கப்படுகிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு அனைத்து உண்மைகளும் தெரிய வருகிறது.

இப்படியான விறுவிறுப்பான த்ரில்லர் கதை களத்துடன் இந்த படத்தை இயக்குனர் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் படத்தொகுப்பு பணிகளை தினேஷ் பொன்ராஜ் மேற்கொண்டு இருக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் ட்ரைலரை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Voni Music