ஹீரோயினாக அறிமுகமாகும் தேவயானி மகள் இனியா.! இனியாவுக்கு ஜோடியாகிறாரா விஜய் மகன்?

தளபதி விஜயின் மகன் சஞ்சயை தற்போது தேவயானியின் மகளுடன் நடிக்க வைக்க தேவயானி திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. தமிழ் திரையுலகின் டாப் ஹிட் ஹீரோக்களில் முதலிடத்தை பிடிப்பவர் தளபதி விஜய். தற்போது அவர் தனது 67வது படத்தில் நடித்து முடித்துவிட்டு 68வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் இவரது மகன் சஞ்சயும் வெளிநாட்டில் உள்ள நடிப்பு பள்ளியில் பயின்று வருகிறார். அவர் பெரும்பாலும் படம் இயக்குவதில் தான் ஆர்வம் காட்டி வருகிறார். சில குறும்படங்களையும் சஞ்சய் இயக்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது விஜயின் மகன் சஞ்சய் ஹீரோவாக நடித்தால் அவருடன் தனது மகளை நடிக்க வைக்கும் முனைப்பில் தேவயாணி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. விஜயன் ரசிகர்கள் சஞ்சய் விஜயும் ஹீரோவாக வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் சஞ்சய் வெளிநாட்டில் சினிமா மேக்கிங் குறித்து படித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டள்ளது. 

ஹீரோயினாக அறிமுகமாகும் தேவயானி மகள் இனியா.! இனியாவுக்கு ஜோடியாகிறாரா விஜய் மகன்? 1
தற்போது குறும்படங்களை அதிகம் இயக்கி வரும் சஞ்சய் விஜய் அடிக்கடி குறும்படங்களை இயக்குவது போன்ற புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் விரைவில் இயக்குனராக தமிழ் திரையுலகத்திற்கு சஞ்சய் என்ட்ரி கொடுப்பார் என்று தெரிகிறது. சஞ்சயை ஹீரோவாக நடிக்க வைக்க இயக்குனர்கள் அல்போன்ஸ் புத்திரன், சுதா கொங்காரா போன்ற இயக்குனர்கள் முயற்சி செய்ததாகவும், இது குறித்து விஜய் உடன் பேசியதாகவும் ஆனால் சஞ்சய் இயக்குனராக வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருக்கிறார், நீங்கள் வேண்டுமானால் அவரிடமே பேசிக் கொள்ளுங்கள் அவர் சம்மதித்தால் அவரை வைத்து படம் செய்யுங்கள் என்று விஜய் கூறியிருந்ததாக இணையத்தில் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இதற்கு சஞ்சய் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தேவயானி விஜய் மகன் சஞ்சயை ஹீரோவாக வேண்டும் என்ற முனைப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  லவ் டுடே படத்தில் இருந்து "சொல்லுங்க மாமா குட்டி" பாடலின் முழு வீடியோ வெளியானது.!

ஹீரோயினாக அறிமுகமாகும் தேவயானி மகள் இனியா.! இனியாவுக்கு ஜோடியாகிறாரா விஜய் மகன்? 3

நீ வருவாய் என்கிற படத்தை இயக்கிய தேவயானியின் கணவர் ராஜகுமாரன் தனது மகள் இனியாவை அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இனியா 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு தற்போது கல்லூரியில் படித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தனது மகளை வைத்து இயக்க ராஜகுமாரன் முடிவு செய்துள்ளதாகவும், இந்த படத்தில் இனியாவுக்கு ஜோடியாக விஜய் மகன் சஞ்சயை ஹீரோவாக நடிக்க வைக்க ராஜகுமாரன் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. விஜயுடன் ஜோடியாக நினைத்தேன் வந்தாய் படத்தில் தேவயானி நடித்திருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு தனது மகள் ஹீரோயினாக அறிமுகமாகும் படத்தில் விஜயின் மகனை ஹீரோவாக நடிக்க வைக்க தேவையானி மற்றும் ராஜகுமாரன் தம்பதிகள் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து தேவயானி தரப்போ அவரது கணவர் தரப்பில் இருந்தோ எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Reflect News Tamil

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment