மாவீரன் படம் நல்லா இருக்கா இல்லையா? என்ன சொல்கிறார்கள் பொதுமக்கள்.! விமர்சனம் இதோ.!

தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்றைக்கு தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் மாவீரன். இந்த படம் குறித்து தற்போது பொதுமக்கள் தங்களது விமர்சனங்களை கூறி வருகின்றனர். மிமிக்ரி கலைஞராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கி மெரினா என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு நடிகராக அறிமுகமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது வரை சுமார் 20 படங்களுக்கு மேல் நடித்து முடித்து இருக்கிறார். கைவசம் மாவீரன், அயலான் தனது பெயரிடப்படாத 21-வது படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் இவர் மண்டேலா படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து தற்போது மாவீரன் என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாவீரன் படம் நல்லா இருக்கா இல்லையா? என்ன சொல்கிறார்கள் பொதுமக்கள்.! விமர்சனம் இதோ.! 1

விளம்பரம்

அரசியல் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தை மடோன் அஸ்வின் இயக்கியிருக்கிறார். அருண் விஷ்வா படத்தை தயாரித்திருக்கிறார். மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்க மிஷ்கின் வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து பிரபல காமெடி நடிகர் யோகி பாபு, நடிகை சரிதா, சுனில் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் மோனிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் சத்யா என்னும் கதாபாத்திரத்தில் ஒரு பத்திரிக்கை துறையில் வேலை பார்க்கும் கார்ட்டூனிஸ்டாக வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் ஊழல்வாதியாக இருக்கும் மிஷ்கினை எதிர்த்து கேள்வி கேட்க பயந்து கொண்டிருக்கிறார். பின்னர் மிஷ்கினை எதிர்த்து இவர் சண்டை செய்ய துவங்குகிறார். பின்னர் என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தில் மீதி கதையாக இருந்தது. தற்போது இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் பலரும் கலவையான விமர்சனங்களையே கூறி வருகின்றனர்.

தொடர்புடையவை  GOAT படத்தின் ஓவர்சீஸ் வசூல்..! முதல்நாளே கோடிகளை அள்ளிக்கொட்டிய வசூல்..! வெளியான தகவல்கள்..!

மாவீரன் படம் நல்லா இருக்கா இல்லையா? என்ன சொல்கிறார்கள் பொதுமக்கள்.! விமர்சனம் இதோ.! 3
முதல் பாகம் மிக நன்றாக இருந்ததாகவும், இரண்டாவது பாகம் மிக மெதுவாக சென்றதாகவும், ரொமான்ஸ் காட்சிகள் எதுவும் இல்லை, இரண்டாம் பாகத்தில் செண்டிமென்ட் காட்சிகளால் படம் எப்போழுது முடியும் என்று ஆகிவிட்டதாக கருத்து தெரிவித்தனர். மிஷ்கினின் நடிப்பு நன்றாக இருந்ததாகவும், யோகி பாபுவின் காமெடிகள் வேற லெவலில் இருந்ததாகவும் மக்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். நீங்களும் மக்கள் கூறிய அந்த விமர்சனத்தைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Bingoobox

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment