ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படம்.! பூஜையுடன் தொடக்கம்.!

நடனக் கலைஞராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து இன்று தமிழில் முன்னணி நடிகராக உயர்த்திருக்கும் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் தற்போது தொடங்கி இருக்கிறது. பல படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்த ராகவா லாரன்ஸ்க்கு 2019 ஆம் ஆண்டு வெளியான இரும்பு குதிரை முரட்டு சிங்கம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. பின்னர் காஞ்சனா, காஞ்சனா 2, மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா, ருத்ரன், காஞ்சனா 3 போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படம்.! பூஜையுடன் தொடக்கம்.! 1

விளம்பரம்

தற்போது இவர் சந்திரமுகி 2, அதிகாரம், துர்கா போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அவர் நடித்துள்ள மற்றொரு படமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எல் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து படம் வெளியீட்டு இருக்க தயாராக இருக்கிறது. இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் தன்னுடைய தம்பி எல்வினுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறார்.

ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படம்.! பூஜையுடன் தொடக்கம்.! 3

விளம்பரம்

தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்த பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், டைரி படத்தை இயக்கிய இன்னாசி பாண்டியன் இயக்கும் புது படம் ஒன்றில் ராகவா லாரன்ஸின் தம்பி கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார்.

தொடர்புடையவை  தங்கை திருமண நிச்சயதார்த்த விழாவில் இறங்கி குத்தாட்டம் போட்ட சாய் பல்லவி.! வைரலாகும் வீடியோ

ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படம்.! பூஜையுடன் தொடக்கம்.! 5

விளம்பரம்

இந்தப் படத்தில் தனது தம்பியுடன் இணைந்து ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆக்ஷன் திரில்லர் ஜானரில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தெலுங்கு நடிகை வைஷாலி ராஜ் இந்த படத்தில் எல்வினுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் மூலமாக வைஷாலி ராஜ் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படம்.! பூஜையுடன் தொடக்கம்.! 7

விளம்பரம்

மேலும் இவர்களுடன் கேபிஒய் வினோத், விஜே தணிகை, சென்ட்ராயன், ஆர் சுந்தர்ராஜன் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க இருக்கிறார். டிமான்டி காலனி, டைரி போன்ற படங்களை ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.

ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படம்.! பூஜையுடன் தொடக்கம்.! 9

விளம்பரம்

தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி என ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் இந்த படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கி இருக்கிறது. சென்னை, தென்காசி, ஹைதராபாத் போன்ற இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்புகள் நடக்க இருக்கிறது.

தொடர்புடையவை  "விஜய் கட்சியில் உள்ள இலக்கணப் பிழை" சுட்டிக்காட்டிய பிரபல youtube தமிழ் ஆசிரியர்.! வீடியோ இதோ.!

ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படம்.! பூஜையுடன் தொடக்கம்.! 11

விளம்பரம்

 

 

விளம்பரம்

இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய ஒன்றை அளித்து இருந்த இன்னாசி பாண்டியன் இது ஒரு முழு நீள ஆக்ஷன் திரைப்படம். இந்த கதையை தான் எனது முதல் திரைப்படமாக இயக்க இருந்தேன், ஆனால் சில காரணங்களால் இயக்க முடியவில்லை, தற்போது இரண்டாவது படமாக எல்வினை வைத்து இந்த படத்தை இயக்குகிறேன், தொடர்ந்து ஆதரவளித்து வரும் தயாரிப்பாளர் கதிரேசனுக்கு நன்றி என்று பேசி இருந்தார்.

ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படம்.! பூஜையுடன் தொடக்கம்.! 13

விளம்பரம்

ஏற்கனவே தனது தம்பியுடன் இணைந்து சில பாடல்களில் ஆடி இருக்கிறார் ராகவா லாரன்ஸ். இந்த நிலையில் அவர் தற்போது அதிகாரப்பூர்வமாக தனது தம்பியுடன் இணைந்து நடிக்க இருக்கும் செய்தியை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வதாக அறிவித்துள்ளார். அந்த படத்திற்கு “புல்லட்” என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் இன்று போஸ்டரைப் பகிர்ந்து அறிவித்திருக்கிறார். மேலும் தனது தம்பியுடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் செய்தியை ராகவா லாரன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment