சிவகார்த்திகேயன் நடித்திருந்த மாவீரன் திரைப்படம் நான்கு நாட்களில் பல கோடிகளை சுருட்டி தற்போது சாதனைப்படைத்து இருக்கிறது. அதை தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். பலரும் சிவகார்த்திகேயனுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நான்கு நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் தான் மாவீரன். இந்த படத்தில் அதிதி சங்கர், நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு குக் வித் கோமாளி பிரபலம் மோனிஷா என்று பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். திரைப்படக் கதையை பொருத்தவரை குடிசைப் பகுதியில் வாழும் சிவகார்த்திகேயனுக்கு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பு கிடைக்கிறது. அங்கு செல்லும் அவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

இதை எதிர்த்து கேள்வி கேட்க முடியாமல் கோழையாக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஒரு அமானுஷ்ய சக்தி கிடைக்கிறது. அந்த சக்தியை கொண்டு அவர் அந்த அரசியல்வாதியை எதிர்த்தாரா என்பது குறித்த கதைதான் மாவீரன் படத்தின் கதையாக இருந்தது. இந்த கதை குறித்து கருத்து தெரிவித்த ரசிகர்கள் பலரும் கதை நன்றாக இல்லை என்ற ரீதியில் கருத்து தெரிவித்து வந்தனர். முதல் பாகம் நன்றாக சென்றதாகவும் இரண்டாம் பாகத்தை இழு இழுவென இழுத்து விட்டதால் படம் எதிர்பார்த்த அளவிற்கு நன்றாக இல்லை என்று கருத்துக்களை தெரிவித்துள்ளனர். டான் டாக்டர் போன்ற நூறு கோடி படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் இந்த படத்தை வைத்து 100 கோடியை வெல்ல முடியாது என்று பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது நான்கு நாட்களில் படம் பெற்றுள்ள விவரம் குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

நான்கு நாட்களில் 50 கோடி வசூலை உலக அளவில் பெற்று இருப்பதாக அறிவித்திருக்கும் அந்த நிறுவனம் சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கும், சினிமா பார்வையாளர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் மீடியா நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்து இருக்கிறது. இந்த படத்தை வெற்றிப் படமாக்கிய அனைவருக்கும் எங்களது நன்றிகள் என்று புதிய போஸ்டர் ஒன்றுடன் அந்த செய்தியை பகிர்ந்து இருக்கிறது அந்த நிறுவனம். இதனால் ரசிகர்கள் பலரும் ஏகத்துக்கும் குஷியில் இருக்கின்றனர். இந்தப் படம் நிச்சயமாக தோல்வியை தழுவும் என்று பலரும் யூகங்களை கூறி வந்த நிலையில் தற்போது 4 நாட்களில் 50 கோடி வசூலை நெருங்கி சாதனை கொடுத்திருக்கிறது மாவீரன்.! இன்னும் வரும் வாரங்களில் இந்த வசூல் அதிகமாகி இந்த படத்தையும் 100 கோடி வெற்றி படமாக எஸ் கே மாற்றி காட்டுவார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.!
Big thanks and Gratitude to SK fans,cinema audience and press & media for making #Maaveeran /#Mahaveerudu a BLOCKBUSTER 💥😇🙏❤️#BlockbusterMaveeran #BlockbusterMahaveerudu
🌟 @Siva_Kartikeyan
🎙️ @VijaySethuOffl / @RaviTeja_offl
🎬 @madonneashwin #VeerameJeyam… pic.twitter.com/IRdO8jkNQF— Shanthi Talkies (@ShanthiTalkies) July 18, 2023