பிக்பாஸ் சீசன் 6ல் ஒரு முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு இருந்த மகேஸ்வரி, தற்போது தனது 38வது பிறந்தநாள் வைத்து கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். நிகழ்ச்சி தொகுப்பாளனியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது வரை 16 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் மகேஸ்வரி.

ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக நிகழ்ச்சி தொகுப்பாளியாக அறிமுகமானவர் மகேஸ்வரி, 16 வருடங்களுக்கு மேலாக தமிழ் திரையுலகில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சன் டிவி, கலைஞர் டிவி, விஜய் டிவி ஜீ தமிழ் என்று பல தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றியிருக்கிறார். சில சீரியல்கள் மற்றும் படங்களிலும் நடித்திருக்கும் அவர் திருமணத்திற்கு பின்பு தொலைக்காட்சியை விட்டு முற்றிலும் விலகி இருந்தார்.

திருமணமாகி சென்ற பிறகு தனது தாயை கவனித்துக் கொள்ள முடியாத சூழல் இருந்த போது தாயாருக்கு உதவியாக வேலைக்கு செல்ல முடிவெடுத்தார் மகேஸ்வரி. அப்போது அவருக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கணவரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது தனது தாயுடன் வசித்து வருகிறார். இவருக்கு கேசவ் என்ற மகனும் இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோ ஷூட்டுகளை நடத்தி பதிவிட்டு வருகிறார் மகேஸ்வரி.

சில காலமாக திரைத்துறையில் இருந்து விலகி இருந்த மகேஸ்வரிக்கு மீண்டும் பிக்பாஸ் சீசன் 6 ஒரு வெளிச்சத்தை கொடுத்தது. இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட அவர், முதல் நாள் தொடங்கி சண்டை சச்சரவு என்று இருந்த இவரை பிக் பாஸில் இருந்து குறைந்த வாக்குகளை அளித்து மக்கள் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தனர். மகேஸ்வரியின் வெளியேற்றம் நியாயமாக இல்லை என்று பலரும் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

தற்போது விஜே மகேஸ்வரி எந்த ப்ராஜெக்டிலும் கமிட் ஆகாமல் இருந்து வருகிறார். விரைவில் அவர் படங்களில் நடிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மகேஸ்வரிக்கு 38 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

பிக்பாஸ் நண்பர்களான ஏடிகே, ஷெரின், ஷிவின் போன்றவர்கள் அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர். மகேஸ்வரியின் புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. பலரும் மகேஸ்வரிக்கு 38 வயதாகி விட்டதா நம்பவே முடியவில்லை என்று சொல்லி அவருக்கு தங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.