எங்க எல்லாரையும் இப்படி ஏமாத்திடீங்களே.! மூர்த்தியிடம் கதறி அழும் மீனா.! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ. !

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தனத்திற்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்த, அது முடியாது என்று தற்போது மூர்த்தி அவரை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல திட்டமிடுகிறார். ஆனால் மீனாவும் முல்லையும் சேர்ந்து திட்டம் போட்டு தற்போது மூர்த்தியின் மனதை மாற்றுகின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. மூன்று ஆண்டுகளை கடந்தும் தற்போது வெற்றிகரமாக இந்த தொடர் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த கதைப்படி மூத்த மருமகளாக இருக்கும் தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருக்கிறது. அதே சமயம் அவர் நிறைமாத கர்ப்பிணியாகவும் இருக்கிறார். ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எங்க எல்லாரையும் இப்படி ஏமாத்திடீங்களே.! மூர்த்தியிடம் கதறி அழும் மீனா.! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ. ! 1
இந்த நிலையில் மருத்துவர் உடனடியாக கதிரியக்க சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறுகிறார். மேலும் சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்து விட்ட பின்னர் தான் இந்த சிகிச்சையை ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் கூறுகிறார். இதனால் அவருக்கு விரைவில் சிசேரியன் செய்ய வேண்டும் என்கிற நிலைமை இருக்கிறது. இதற்கிடையில் தற்போது அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். அங்கு மூர்த்தி தனத்திற்கு அறுவை சிகிச்சை செய்வதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சண்டை போடுகிறார். இதனால் தனமும் முல்லையும் இவரை எப்படியாவது இங்கயே சிசேரியன் செய்ய அனுமதிக்க வைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டுகின்றனர். இதனால் மீனா கதிரிடமும், முல்லை ஜீவாவிடமும் சென்று பேசுகின்றனர். பின்னர் எதற்கும் அசைந்து கொடுக்காத மூர்த்தியிடமே நேரில் சென்று பேசுகின்றனர். மூர்த்தி சிசேரியன் செய்ய அனுமதிக்க கூடாது என்கிற முடிவில் தெளிவாக இருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியல் நடிகை.! வெளியான புகைப்படம்

எங்க எல்லாரையும் இப்படி ஏமாத்திடீங்களே.! மூர்த்தியிடம் கதறி அழும் மீனா.! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ. ! 3
மீனாவும் முல்லையும் இணைந்து அழுது நடிப்பை போடுகின்றனர். இதை பார்க்கும் மூர்த்தி மனம் இறங்குவாரா தனத்திற்கு சிசேரியன் நடக்குமா? அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்கிற பரபரப்பு தற்போது எழுந்திருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment