ப்ரியாவை குழந்தை போல கவனித்துக் கொள்ளும் ஜீவா.! ஈரமான ரோஜாவே இந்த வார ப்ரோமோ.!

ஈரமான ரோஜாவே சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மாடிப்படியில் இருந்து வழுக்கி விழுந்த பிரியாவை தற்போது ஜீவா குழந்தை போல் கவனமாக பார்த்துக் கொள்கிறார். இருந்த போதும் பிரியா தற்போது ஜீவாவின் கண்ணில் குத்தி அவரை காயப்படுத்துகிறார். இந்த காமெடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.

ப்ரியாவை குழந்தை போல கவனித்துக் கொள்ளும் ஜீவா.! ஈரமான ரோஜாவே இந்த வார ப்ரோமோ.! 1
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட ஒரு சீரியல் தான் ஈரமான ரோஜாவே. முதல் பாகம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. தனது தங்கை காவ்யாவும், கணவர் ஜீவாவும் காதலித்து வந்த நிலையில், தங்கையின் காதலரை தான் திருமணம் செய்து கொண்டோமே என்று பிரியாவிற்கு சங்கடம் ஏற்படுகிறது.

விளம்பரம்

தங்கை காவ்யா ஜீவாவின் அண்ணனையே திருமணம் செய்து கொள்ள, தங்கை காதலித்து வந்த தம்பி ஜீவாவை பிரியா திருமணம் செய்து கொண்டது குறித்து பிரியா தினமும் வேதனையில் ஆழ்கிறார். தனது தங்கையும் அவரின் முன்னாள் காதலரும் ஒரே வீட்டில் இருக்கக் கூடாது என்று சொல்லி பிரியா அதிரடி முடிவுகளை எடுத்து தனிக்குடித்தனம் செல்ல ஏற்பாடு செய்கிறார். ஆனால் தனிக்குடித்தனம் சென்ற அவருக்கு அங்கு மாடிப்படியில் இருந்து வழுக்கி விபத்து ஏற்படுகிறது.

தொடர்புடையவை  அடப்பாவிங்களா..போன வாரம் தானேடா அது நடந்துச்சு.. அதுக்குள்ள வளைகாப்பு போட்டீங்களா? கேலிக்கு உள்ளான விஜய் டிவி

ப்ரியாவை குழந்தை போல கவனித்துக் கொள்ளும் ஜீவா.! ஈரமான ரோஜாவே இந்த வார ப்ரோமோ.! 3
அவரை தூக்கி கொண்டு வீட்டிற்கு வரும் ஜீவா தற்போது தனது வீட்டிலேயே வைத்து கவனித்து வருகிறார். மேலும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜீவா பிரியாவிற்கு சுடிதார் அணிய உதவி செய்கிறார். மேலும் கை வலிக்கிறது என்று சொன்னவுடன் அவருக்கு பேண்டேஜ் வாங்கி அதை மாட்டிக் கொண்டிருக்கிறார்.
அப்போது கழுத்தில் இருக்கும் மச்சத்தை பார்த்து இன்று ஏதோ கருப்பாக இருக்கிறது என்ற ஜீவா கூற அவரது கண்ணில் குத்தி விடுகிறார் பிரியா.

விளம்பரம்

கண்ணைப் பார்த்து மட்டும் தான் பேச வேண்டும் வேறு எங்கேயும் பார்க்க கூடாது என்று சொல்லி அவரது கண்களில் குத்தி விடுகிறார். இந்த காமெடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விரைவில் ஜீவாவும் பிரியாவும் சேர வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment