கயலை வெளிய அனுப்புனா நானும் போய்டுவேன்.! வடிவை அடக்கிய எழில்.! கயல் சீரியல் Today Promo.!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கயலுக்கும் எழிலுக்கும் தற்போது திருமணம் நடைபெறுமா இல்லையா என்கிற எதிர்பார்ப்பு பலருக்கும் நிலவி வரும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ப்ரோமோவை பார்த்த பின் பலரும் இப்போது இந்த சீரியலில் எழிலுக்கும் கயலுக்கும் திருமணம் நடக்குமா இல்லையா என்று தொடர்ந்து கமெண்டில் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த இரண்டு வாரமாக ஒரே கதையை வைத்து உருட்டிக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.

கயலை வெளிய அனுப்புனா நானும் போய்டுவேன்.! வடிவை அடக்கிய எழில்.! கயல் சீரியல் Today Promo.! 1

விளம்பரம்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் தற்போது பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் ஒரு சீரியலாக இருந்து வருகிறது. கயலுக்கும் எழிலுக்கும் திருமணம் நடக்கும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் எழிலுக்கும் ஆர்த்திக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த திருமணத்தில் கயல் குடும்பத்துடன் கலந்து கொள்கிறார். ஆனால் ஆர்த்தியின் தாயார் வடிவு கயல் குடும்பத்தை திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறுமாறு கூறுகிறார். இதனால் கடுப்பாகும் எழில் வடிவிடம் நேராக சென்று சண்டை போடுகிறார்.

தொடர்புடையவை  ஒரு திருநங்கை இவ்வளவு தூரம் வந்து இருக்காங்க-ன்னா அவங்க ஒரு புரட்சியாளர்.! கெத்தாக சொன்ன விக்ரம்

கயலை வெளிய அனுப்புனா நானும் போய்டுவேன்.! வடிவை அடக்கிய எழில்.! கயல் சீரியல் Today Promo.! 3
நீங்கள் கயல் குடும்பத்தை வெளியே அனுப்பினால் நானும் அவர்களுடன் சேர்ந்து வெளியேறி விடுவேன் என்று சொல்லி தற்போது வடிவை அடக்கி இருக்கிறார் எழில். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. ஆனாலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சோர்வில் இருக்கின்றனர். கடந்த ஒரு வாரமாக காஸ்டியூமை கூட மாற்றாமல் இப்படி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறீர்களே என்று ரசிகர்களே கடுப்பாகும் அளவிற்கு கதை நகர்ந்து கொண்டிருக்கிறது..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment