யாருமே இல்லாமல் தனியாக பிறந்தநாளை கொண்டாடிய பாக்யலட்சுமி சீரியல் நடிகை ராதிகா.!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது தனது பிறந்த நாளை வீட்டிலேயே எளிமையாக கொண்டாடி இருக்கிறார். நண்பர்கள் யாரும் இல்லாமல் தனது மகனுடன் சேர்ந்து அவர் தனது பிறந்தநாளை வீட்டிலேயே கேக் கட் செய்து கொண்டாடி இருக்கிறார். அவருக்கு பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

யாருமே இல்லாமல் தனியாக பிறந்தநாளை கொண்டாடிய பாக்யலட்சுமி சீரியல் நடிகை ராதிகா.! 1
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பலரின் உள்ளங்களை வென்றவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. வில்லியாகவும், கோபியின் இரண்டாவது மனைவியாகவும் நடித்து தற்போது பலரின் மனம் கவர்ந்த நடிகயாக இருக்கிறார். விமானப் பணிப் பெண்ணாக தனது வாழ்க்கையை தொடங்கி பின்னர் வம்சம் சீரியல் மூலமாக திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார்.

விளம்பரம்

இவரது தந்தை பிரசாத் பிரபல தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளராக இருக்கிறார் அவர் தந்தை தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். இதுதான் அவர் நடித்த முதல் படம் பின்னர் சில படங்களில் நடித்திருந்த போதிலும், அவருக்கு பெரிய அளவில் எந்த படமும் கை கொடுக்கவில்லை. எனவே பிக்பாஸ் சீசன் 3ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் எதிர்பாராத விதமாக இந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் ரேஷ்மா.

தொடர்புடையவை  காவ்யாவின் கழுத்தில் இருந்த தாலியை கழட்ட சொன்ன பார்த்தி.! மனம் உடைந்து போன காவ்யா.!

யாருமே இல்லாமல் தனியாக பிறந்தநாளை கொண்டாடிய பாக்யலட்சுமி சீரியல் நடிகை ராதிகா.! 3

விளம்பரம்

வெளியே வந்த பின்னர் அவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் வில்லத்தனங்களை செய்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் அவருக்கு அடுத்தடுத்த நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் தொடரிலும் நடித்து வருகிறார் ரேஷ்மா.

யாருமே இல்லாமல் தனியாக பிறந்தநாளை கொண்டாடிய பாக்யலட்சுமி சீரியல் நடிகை ராதிகா.! 5
இந்த நிலையில் ரேஷ்மாவிற்கு சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. நண்பர்கள் உறவினர்கள் என யாரையும் அழைக்காமல் தனது மகனுடன் அவர் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். 40 வயது நெருங்கிவிட்ட ரேஷ்மாவிற்கு தற்போது அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

விளம்பரம்

யாருமே இல்லாமல் தனியாக பிறந்தநாளை கொண்டாடிய பாக்யலட்சுமி சீரியல் நடிகை ராதிகா.! 7

பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்து இருக்கிறார். மேலும் தனக்கு வாய்ப்பு வழங்கி வரும், ஜீ தமிழ், விஜய் டெலிவிஷன், மேக் மீடியா என்டர்டைமென்ட் ஆகிய நிறுவனங்களுக்கு தன்னுடைய நன்றியையும் அவர் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே திருமணம் ஆகி கணவருடன் விவாகரத்தான நிலையில் தனது மகனுடன் ரேஷ்மா சென்னையில் தனியாக வசித்து வருவது குறிப்பிடத்தக்கது..!

விளம்பரம்
தொடர்புடையவை  குட் நைட் பட மணிகண்டனுடன் கை கோர்த்த அதர்வா.! மத்தகம் படத்தின் டீசர் வெளியானது.!

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment