விடுதலை பாகம் 2-ல் விஜய் சேதுபதிக்கு ஜோடி யார் தெரியுமா? களம் இறங்கிய அஜித் பட நடிகை.!

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக. நடிக்கப் போகும் நடிகை பற்றிய தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது சூரிக்கு ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஹீரோயினாக இருந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதிக்கு யார் ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் தான் விடுதலை. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறு நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரே பாகமாக வந்திருக்க வேண்டிய இந்த படம் படத்தின் நீளம் கருதி இரண்டு பாகமாக வெளியாக இருக்கிறது. நடிகர் சூரி முதல் முறையாக போலீஸ் கதாபாத்திரம் ஏற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

விடுதலை பாகம் 2-ல் விஜய் சேதுபதிக்கு ஜோடி யார் தெரியுமா? களம் இறங்கிய அஜித் பட நடிகை.! 1
எப்பொழுதும் காமெடி டிராக்கில் நடித்து வந்த சூரி தற்போது முதல் முறையாக காமெடியை கைவிட்டுவிட்டு சீரியஸான ட்ராக்கில் இறங்கி இருந்தார். கான்ஸ்டபிள் குமரேசனாக பலரின் மனங்களை வென்று இருந்தார் சூரி. விஜய் சேதுபதி இருக்கும் படத்தில் சூரி கதாநாயகனாக இருந்தார். அதேபோல விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வழக்கம் போல அசத்தியிருந்தார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் சேர்த்தன், கௌதம் வாசுதேவ் மேனன், இளவரசு, நடிகை பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மலைவாழ் கிராமத்தில் சுரங்கம் அமைக்கும் பணிகளை எதிர்த்து போராடும் மக்கள் அமைப்பு, பின்னர் தீவிரமாக மாறுகிறது. அந்த தீவிரத்தை ஒடுக்க அந்த மலைப் பகுதி முழுவதும் போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  "நாங்கள் பிரிந்துவிட்டோம்" ஜோதிகா பட இயக்குனரை பிரிவதாக அறிவித்த மனைவி.!

விடுதலை பாகம் 2-ல் விஜய் சேதுபதிக்கு ஜோடி யார் தெரியுமா? களம் இறங்கிய அஜித் பட நடிகை.! 3

அந்த அமைப்புக்கு தலைமை தாங்கும் பெருமாள் வாத்தியார் புதிதாக பணியில் சேர்ந்த சூரியின் உதவியால் பிடிபடுகிறார். பின்னர் என்ன நடக்கிறது அவர்களிடமிருந்து பெருமாள் வாத்தியார் தப்பித்தாரா என்பதுதான் படத்தின் இரண்டாம் பாகத்தின் சஸ்பென்சாக இருந்து வருகிறது. தற்போது இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை முடித்த பின்பு சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க இருக்கிறார் வெற்றிமாறன். எனவே விரைவில் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே விஜய் சேதுபதியின் ஃப்ளாஷ் பேக்கில் அவரது குழந்தை பருவமாக அவரது மகனே நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில் தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக யார் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது.

விளம்பரம்

 

விளம்பரம்
தொடர்புடையவை  ஐஸ்வர்யா ராஜேஷின் 33வது பிறந்த நாள்.! நைட் பார்ட்டியில் மரண குத்தாட்டம் போட்ட ஐஸ்வர்யா.!

அதில் அசுரன் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மஞ்சுவாரியர் தான் தற்போது விடுதலை பாகம் இரண்டிலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அசுரன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மஞ்சுவாரியர் இந்த படத்திலும் ஒரு கலக்கு கலக்குவார் என்று தெரிகிறது. மேலும் விஜய் சேதுபதியின் ஃப்ளாஷ் பேக்கில் தரமான சம்பவம் காத்திருப்பதாகவும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்..!

விளம்பரம்

Leave a Comment