ஆங்கிலேயர்களை விரட்டி விரட்டி வெளுக்கும் தனுஷ்.! கேப்டன் மில்லர் படத்தின் டீசர் இதோ.!

நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு தற்போது அவர் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் டீசரை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். தமிழ் திரையுலகில் பல அவமானங்களை சந்தித்து இன்று முன்னணி நடிகராக உயர்த்திருப்பவர் நடிகர் தனுஷ். கஸ்தூரிராஜாவின் மகனும் இயக்குனர் செல்வராஜின் தம்பியுமான இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என பல துறைகளிலும் பணியாற்றி இருக்கிறார். 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி சுமார் 46 படங்களில் நடித்து முடித்திருக்கிறார் தனுஷ். தற்போது தனது 47வது படமான கேப்டன் மில்லர் படத்திலும், தேரே இஸ்க் மேன் என்ற ஹிந்தி படத்திலும், பெயரிடப்படாத தனது 50 வது படத்திலும் நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தில் இருந்து ஒவ்வொரு அப்டேட்டுகளாக வெளியாகி வருகிறது. படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்களை விரட்டி விரட்டி வெளுக்கும் தனுஷ்.! கேப்டன் மில்லர் படத்தின் டீசர் இதோ.! 1

விளம்பரம்

தற்போது இவர் நடித்து முடித்திருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. தனுஷின் 39 வயது முடிந்து நாற்பதாவது பிறந்த நாள் கொண்டாடப்பட இருப்பதால், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்த டீசரை படக் குழுவினர் வெளியிட்டி இருக்கின்றனர். இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், சந்திப் கிஷன், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பிணக்குவியல்களுக்கு மத்தியில் கையில் துப்பாக்கியுடன் தனுஷ் நிற்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி இருந்தது. இதனால் இந்த படம் போர்க்காட்சிகள் நிறைந்த படமாக இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடையவை  என் பையன் பொழைக்க மாட்டான்னு சொன்னாங்க..ஆனா.! கண்கலங்கி அழுத கனிகா

ஆங்கிலேயர்களை விரட்டி விரட்டி வெளுக்கும் தனுஷ்.! கேப்டன் மில்லர் படத்தின் டீசர் இதோ.! 3
தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகியுள்ளஅந்த டீசரை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sathya Jothi Films

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment