சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பலரின் மனம் கவர்ந்த சீரியலாக இருந்த ஒரு சீரியல்தான் மெட்டி ஒலி. தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது. இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் தகவல் வெளியாகியிருக்கிறது. மெட்டி ஒலி முதல் பாகத்தை இயக்கிய திருமுருகனே இரண்டாம் பாகத்தையும் இயக்க இருப்பதாகவும் அதே நடிகர்களை வைத்து இயக்க இருப்பதாகவும் தற்போது மகிழ்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

90ஸ் கிட்ஸ்களின் காலமே ஒரு அழகிய காலம் தான். மொபைல் போன்கள் கிடையாது. டிவிக்கள் அதிகம் கிடையாது. பக்கத்து வீட்டிற்கு சென்று டிவி பார்த்த காலங்கள் அதிகம் உண்டு. அப்படி பலரும் விரும்பி பார்த்த ஒரு நாடகம் தான் மெட்டி ஒலி. ஐந்து பெண் பிள்ளைகளை பெற்ற தந்தையும் அவர்களை திருமணம் செய்து கொடுத்த இடத்தில் நடக்கும் பிரச்சினைகளும் என்று சுமார் ஐந்து வருடங்களுக்கும் மேலாக தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்த ஒரு சீரியல் என்றால் அது மெட்டி ஒலி தான்.
இரவு 9:00 மணி ஆனாலே “அம்மி அம்மி மிதித்து” என்கிற பாடலுடன் அனைவரது இல்லங்களிலும் ஒலித்த ஒரு தொடர். எதார்த்தம், அன்பு, பாசம், கூட்டுக் குடும்பம், பெண் பிள்ளைகளைப் பெற்ற தந்தையின் கஷ்டம் என எந்த ஒரு மிகைப்படுத்துதல் இல்லாமல் ஒளிபரப்பானது இந்த சீரியல். தற்போது விரைவில் மெட்டி ஒலியின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாக இருப்பதாக தற்போது தகவல்கள் கிடைத்திருக்கிறது. பாகம் 1-யில் நடித்த நடிகர்கள் பலரையும் வைத்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட இருக்கிறது.

தனம், சரோ, லீலா, விஜி, பவானி என்கிற ஐந்து பேரில் தற்போது விஜி கதாபாத்திரத்தில் நடித்து வந்த உமா மகேஸ்வரி மட்டும் காலமாகி இருக்கிறார். மற்றபடி அனைத்து நடிகர்களும் இருக்கும் நிலையில் அனைவரையும் இதே ரோலில் நடிக்க வைக்க சீரியல் குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை திருமுருகன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருமுருகனின் சொந்த கம்பெனியான திரு பிக்சர்ஸ் நிறுவனம் இதை தயாரிக்க இருப்பதாகவும் தெரிகிறது. திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் என்ற தொடரும் எம் மகன் படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் மெட்டி ஒலி 2 தொடர் ஆரம்பிக்கப்பட்டால் அது தற்போது சன் டிவியில் சக்கை போடு போட்டு வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு கண்டிப்பாக டஃப் கொடுக்கும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.!