இந்த கல்யாணம் நடக்காது.! மனோஜ் ரோகிணி திருமணத்தை நிறுத்திய முத்து.! அதிரடி திருப்பம்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடு பரபரப்பாக முடிந்திருக்கிறது. திருமணத்தை நிறுத்துமாறு முத்து மண்டபத்தில் வந்து பிரச்சனை செய்ய தற்போது அடுத்த பரபரப்பு கிளம்பி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் சிறகடிக்க ஆசை. தற்போது இந்த சீரியலில் ஹீரோவாக இருக்கும் முத்துவின் அண்ணன் மனோஜின் திருமணம் நடைபெற இருக்கிறது. ரோகிணிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கும் நிலையில் அதை மறைத்து தற்போது மனோஜை திருமணம் செய்து கொள்ள திட்டமிடுகிறார் ரோகிணி.

இந்த கல்யாணம் நடக்காது.! மனோஜ் ரோகிணி திருமணத்தை நிறுத்திய முத்து.! அதிரடி திருப்பம்.! 1

விளம்பரம்

இந்த விஷயம் வீட்டில் இருக்கும் யாருக்கும் தெரியவில்லை. குறிப்பாக மனோஜ்க்கும் அவருடைய தாயார் விஜயாவிற்கும் தெரியவில்லை. ரோகினியை நம்பி திருமண ஏற்பாடுகளை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் மீனா விளக்கை ஏற்றிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் விஜயா நீ ஒரு தரித்திரம் பிடித்தவள், ராசி இல்லாதவள், நீ விளக்கு ஏற்றினால் இந்த திருமணம் நடக்காது என்று சொல்லி அவரின் மனதை காயப்படுத்தி அங்கிருந்து அனுப்பி விடுகிறார்.

தொடர்புடையவை  சிக்கன் கறிக்கு பதிலாக காக்கா கறியை கொடுத்ததா பிரபல நிறுவனம்?? வனிதா போட்ட பரபரப்பு ட்வீட்.!

இந்த கல்யாணம் நடக்காது.! மனோஜ் ரோகிணி திருமணத்தை நிறுத்திய முத்து.! அதிரடி திருப்பம்.! 3

விளம்பரம்

இதனால் மனமுடைந்து போன மீனா அங்கிருந்து வெளியேறி வெளியில் இருக்கும் தனது தாயார் மற்றும் தம்பிகளிடம் இது பற்றி கூறிக் கொண்டிருக்கிறார். மறுபுறம் ரோகிணியின் திருமணத்தை நிறுத்த வரும் பிஏ காரில் வந்து கொண்டிருக்கிறார். அந்த காரை முத்து தான் ஓட்டி வருகிறார். அப்போது மணப்பெண்ணின் பெயரை கூறாமல் பி ஏ இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்றும் தனது நண்பர்களிடம் போனில் பேசிக் கொண்டு வருகிறார். மேலும் ரோகிணியை தான் திருமணம் செய்து கொண்டால் தனது நண்பர்களுக்கு விருந்தாக்குவேன் என்று மிக அசிங்கமாக பேசிக் கொண்டிருக்கிறார். பை ரோகிணி பற்றி தான் பேசுகிறார் என்பது தெரியாமலேயே முத்துவிற்கு பிஏவிற்கு கோபம் ஏற்படுகிறது.

இந்த கல்யாணம் நடக்காது.! மனோஜ் ரோகிணி திருமணத்தை நிறுத்திய முத்து.! அதிரடி திருப்பம்.! 5

விளம்பரம்

இதனால் பாதி வழியிலேயே பிஏ-வை இறக்கிவிட்டு அவரை அடித்து துவைத்து விட்டு மண்டபத்திற்கு வருகிறார் முத்து. அப்போது வெளியில் மீனா மற்றும் அவரது குடும்பத்தினர் அழுது கொண்டிருக்கின்றனர். தற்போது அதை பார்த்த முத்து என்ன நடந்தது என்று கேட்கிறார் அப்போது விஜயா மீனாவை தரித்திரம் பிடித்தவள் என பேசியதாக கூற உடனே முத்துவிற்கு கோபம் வருகிறது. தனது தாயார் விஜயாவிடம் சென்று இது குறித்து கேள்வி எழுப்புகிறார். மேலும் இந்த திருமணத்தை நிறுத்துமாறு முத்து கத்துகிறார். மீனாவிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே இந்த திருமணம் நடைபெறும் என்று முத்து கோபத்துடன் பேசுகிறார். ஆனால் விஜயா தான் மன்னிப்பு கேட்க போவதில்லை என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

தொடர்புடையவை  'அண்ணா' சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை.! அவரே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இந்த கல்யாணம் நடக்காது.! மனோஜ் ரோகிணி திருமணத்தை நிறுத்திய முத்து.! அதிரடி திருப்பம்.! 7

விளம்பரம்

உடனே முத்து தாலி இருந்தால் தானே திருமணம் செய்வீர்கள் தாலியை எடுத்து விட்டால் என்ன செய்வீர்கள் என்று சொல்லி அங்கிருந்து தாலியை எடுத்துக் கொண்டு செல்ல முயற்சி செய்கிறார். அப்போது மீனா சாமி காலடியில் வைத்து பூஜை செய்த தாலியை எடுத்துக் கொண்டு செல்கிறீர்களே இதெல்லாம் உங்களுக்கு விளையாட்டாக இருக்கிறதா என்று சொல்லி முத்துவை சமாதானப்படுத்துகிறார். மேலும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இப்படியா விளையாடுவது என்று சொல்லி முத்துவிடம் மீனா கூறிக் கொண்டிருக்கிறார்.

இந்த கல்யாணம் நடக்காது.! மனோஜ் ரோகிணி திருமணத்தை நிறுத்திய முத்து.! அதிரடி திருப்பம்.! 9

விளம்பரம்

மீனாவிடம் மன்னிப்பு கேட்காவிட்டால் நான் இந்த மண்டபத்தை விட்டு வெளியேறுகிறேன் என்று சொல்லி முத்து கோபமாக வெளியேறுகிறார். ஆனால் அவரை அவரது தந்தை ஒரு நிமிடம் நில்லுடா என்று சொல்லி அழைக்க அப்படியே நிற்கிறார் அத்துடன் இன்று எபிசோடு நிறைவடைகிறது. முத்துவிடம் உதை வாங்கிய பி ஏ கோவிலுக்கு வருவானா என்பது தெரியவில்லை. அடுத்து என்ன நடக்கும் என்கிற பரபரப்புடன் இந்த இன்றைய எபிசோடு நிறைவடைந்து இருக்கிறது

விளம்பரம்

Leave a Comment