விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் தொடர் தான் கிழக்கு வாசல். தற்போது இந்த தொடரின் புது புரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. இதில் ஹீரோவாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் ரங்கநாதன் நடிக்க இருக்கிறார். அவர் ஆட்டோக்காரனாக இருப்பது போலவும், அவரது முறைப் பெண்ணாக நடிகை ரேஷ்மா முரளிதரன் இருப்பது போலவும் அறிமுகப்படுத்தி புதிய ப்ரோமோவை தற்போது சீரியல் குழுவினர் வெளியிட்டுள்ளனர். ப்ரோமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய சீரியலின் வருகைக்காக பாரதி கண்ணம்மா சீசன் 2 முடிவடைய இருக்கிறது. தொடர்ந்து ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் இந்த புதிய தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. ராதிகா சரத்குமாரின் ரேடான் மீடியா நிறுவனம் தயாரிக்கும் இந்த சீரியல் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
தற்போது இந்த தொடரில் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அவருடன் இணைந்து விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் ரங்கநாதன் தற்போது நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இவருக்கு ஜோடியாக ரேஷ்மா முரளிதரன் ரேணுகா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதன் முதல் ப்ரோமோ வெளியான போது எஸ்ஏ சந்திரசேகரின் வளர்ப்பு மகளாக இருக்கும் ரேஷ்மா வளர்ப்பு மகள் என்ற காரணம் காட்டி சபையில் வைத்து அசிங்கப்படுத்தப்படுகிறார். அப்போது கோபப்படும் எஸ்ஏ சந்திரசேகர் அவள் என்னுடைய குல சாமி என்று கூறுகிறார்.

இப்படியாக முதல் ப்ரோமோ வெளியான நிலையில், தற்போது இரண்டாவது ப்ரோமோவை வெளியிட்டு இருக்கின்றனர். அதில் வெங்கட் ரங்கநாதன் சண்முகம் என்கிற கதாபாத்திரத்திலும், நடிகை ரேஷ்மா முரளிதரன் ரேணுகா என்கிற கதாபாத்திரத்திலும் நடிக்க இருப்பதாக அறிமுக வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர்.
ஆட்டோ ஓட்டுனராக இருக்கும் சண்முகத்திடம் ரேணுகா எங்கேயாவது என்னை தூரமாக அழைத்துச் செல்கிறீர்களா? என்று கேட்கிறார். அதற்கு சம்மதிக்கும் சண்முகம் அவரை கடற்கரைக்கு அழைத்து வந்து, வாழ்க்கையைப் பார்த்து பயந்தா எப்படி நிம்மதியாக வாழ முடியும்? என்று தத்துவம் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரை கிண்டல் அடித்து ரேணுகா சிரித்துக் கொண்டிருக்கிறார். அதுபோன்ற ஒரு ப்ரோமோவை வெளியிட்டு இருக்கின்றனர். இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் ப்ரோமோ நன்றாக இருக்கிறது. சீரியலும் நன்றாக இருக்கும் போல என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் வெங்கட் ரங்கநாதன் ரேஷ்மாவிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television