ஜீவானந்தம் குணசேகரனுக்கு உறவுக்காரனா.? சந்தேகப்படும் கதிர்.! அதிர்ச்சியில் ஆதி குணசேகரன்.!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் நாளுக்கு நாள் பரபரப்பை எகிற வைக்கும் வரும் நிலையில் தற்போது இன்றைய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் ஜீவானந்தம் ஒரு வேலை பட்டம்மாளின் உறவுக்காரனாக இருப்பானோ என்கிற சந்தேகம் தற்போது கதிருக்கு எழுந்திருக்கிறது. இதனால் அடுத்த பரபரப்பு கதையில் எழுந்து இருக்கிறது. ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜீவானந்தம் குணசேகரனுக்கு உறவுக்காரனா.? சந்தேகப்படும் கதிர்.! அதிர்ச்சியில் ஆதி குணசேகரன்.! 1
ஆதி குணசேகரனின் அப்பத்தாவாக இருக்கும் பட்டமாளின் 40 சதவீத பங்குகளை தற்போது ஜீவானந்தம் தன் பெயருக்கு மாற்றிவிட்டார். இந்த விஷயம் தெரிந்த ஆதி குணசேகரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது பின்னர் பக்கவாதம் ஏற்பட்டு ஒரு கை முடங்கி விட்டது.

விளம்பரம்

தற்போது இந்த ஜீவானந்தம் யார் என்பதை கண்டுபிடிக்க ஜனனி ஒருபுறம் போலீசாரின் உதவியை நாடி சென்று கொண்டிருக்கிறார். மறுபுறம் ஜீவானந்தத்தின் கதையை முடித்து வைப்பதற்காக வளவன் என்கிற முன்னாள் காவல்துறை அதிகாரியை தேடி ஆதி குணசேகரன் சென்னைக்கு சென்று இருக்கிறார். இந்த நிலையில் தற்போது ஜனனி ஜீவானந்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றொரு நபரை சந்தித்து பேசுகிறார். அப்போது பாதிக்கப்பட்ட அந்த நபர் ஒரு வேளை இவர்கள் ஜீவானந்தத்தின் ஆட்களாக இருக்குமோ என்று சந்தேகிக்கின்றனர். அவர்களிடம் சக்தி நான் குணசேகரனின் தம்பி இவர் என்னுடைய மனைவி என்று ஜனனியை அறிமுகப்படுத்துகிறார்.

தொடர்புடையவை  உங்க அப்பன் என்ன மலேசிய பிரதமரா? உண்மையாவே உங்க அப்பா இருக்காரா? இல்ல கற்பனையா?

ஜீவானந்தம் குணசேகரனுக்கு உறவுக்காரனா.? சந்தேகப்படும் கதிர்.! அதிர்ச்சியில் ஆதி குணசேகரன்.! 3

விளம்பரம்

மறுபுறம் குணசேகரனும் கதிரும் நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நம்ம பட்டமாளுக்கும் ஜீவானந்தத்திற்கும் என்ன சம்பந்தம் என்று ஜீவானந்தம் பற்றி இருவரும் தீவிரமாக யோசித்து கொண்டு இருக்கின்றனர். அப்போது கதிருக்கு திடீரென ஜீவானந்தம் நம்முடைய உறவினராக இருக்க கூடுமோ என்கிற சந்தேகம் வருகிறது.

அப்போது குறுக்கிடும் குணசேகரன் உறவா இருக்கோனோ இல்ல கருவா இருக்கானோ அவனுடைய கதையை முடிக்க வேண்டும் என்று கூறுகிறார். சில நாட்களாக ஜீவானந்தம் யார் என்கிற பரபரப்பு பார்க்கும் ரசிகர்களிடையே எழுந்திருக்கும் நிலையில், தற்போது அப்பத்தா எழுந்தால் தான் இதற்கெல்லாம் ஒரு முடிவு தெரிய வரும். அப்பத்தா விரைவில் எழுவாரா? அவர் ஜீவானந்தம் தன்னை ஏமாற்றி கைரேகை பெற்ற ரகசியத்தை உடைப்பாரா என்பதெல்லாம் எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment