ஒரு அளவுக்கு மேல பேச்சே கிடையாது.! வீச்சு தான்.! மரண மாஸாக வெளியானது ஜெயிலர் ட்ரைலர்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. நீண்ட எதிர்பார்ப்புக்கு பின்னர் ட்ரைலர் மாஸாக வெளியாகிய ரஜினி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ட்ரைலரை பார்த்த பின் படம் தாறுமாறாக இருக்கப் போகிறது என்று ரசிகர்கள் இணையத்தில் வேகமாக வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது தனது 169 வது படமான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு அளவுக்கு மேல பேச்சே கிடையாது.! வீச்சு தான்.! மரண மாஸாக வெளியானது ஜெயிலர் ட்ரைலர்.! 1

விளம்பரம்

இந்தப் படத்தை கோலமாவு கோகிலா, பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, மோகன்லால், ஜாக்கி ஷரப், சிவராஜ் குமார், சுனில் போன்ற பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். முத்துவேல் பாண்டியன் என்கிற கதாபாத்திரத்தில் சிறை கைதிகளுக்கு ஜெயிலராக சூப்பர் ஸ்டார் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஒன்பது நாட்கள் மட்டுமே மீதம் இருந்த நிலையில் ட்ரைலர் இன்னும் வெளியாகாமல் இருந்தது சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களுக்கு இடையே சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரு புது அறிவிப்பை போஸ்டருடன் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  மகனுடன் கொஞ்சி விளையாடும் நடிகை Amalapaul..! செம்ம கியூட்டான புகைப்படங்கள் இதோ..!

ஒரு அளவுக்கு மேல பேச்சே கிடையாது.! வீச்சு தான்.! மரண மாஸாக வெளியானது ஜெயிலர் ட்ரைலர்.! 3

அதில் கையில் துப்பாக்கியுடன் சூப்பர் ஸ்டார் யாரோ சுடுவது போன்ற ஒரு போஸ்டரை வெளியிட்டு, “லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்” என்கிற வசனத்துடன் இன்று மாலை ட்ரைலர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது படக்குழு.

விளம்பரம்

அறிவித்தபடியே இன்று மாலை 6:00 மணிக்கு சரியாக ட்ரைலரை வெளியிட்டு ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து இருக்கின்றனர் படக்குழுவினர். மிக மாஸாக அந்த ட்ரைலர் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோவை பார்த்த ரஜினி ரசிகர்கள் பலரும் தலைவர் தரமான சம்பவம் செய்திருப்பதாக கூறி அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். முகநூல், instagram, whatsapp ஸ்டேட்டஸ் என அனைத்திலும் ஜெயிலர் படத்தின் ட்ரைலர் ஆக்கிரமித்து இருப்பதை காண முடிகிறது. நீங்களும் ஜெயிலர் ட்ரைலரைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்

Leave a Comment