முஸ்லீம்களும் கிறித்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் என பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது.!

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பூதாகரமாகி வரும் ஒரு விஷயம் தான் சீமானின் இஸ்லாமியர்கள் குறித்த பேச்சு. இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் தேவனின் பிள்ளைகளாக இருந்தது போய் தற்போது சாத்தானின் பிள்ளைகளாக மாறி நிற்கிறார்கள் என்று சீமான் கூறிய கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமூக பதற்றத்தை தூண்டுவதாக இந்த பேச்சு அமைந்துள்ளதாக பலரும் சீமானுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு நடிகர் ராஜ்கிரண் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருந்தார். மேலும் மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லாவும் கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்த நிலையில் சீமான் தற்போது இருவருக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முஸ்லீம்களும் கிறித்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் என பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது.! 1

விளம்பரம்

தமிழக அரசியலில் அதிரடிக்கு பெயர் போன அரசியல்வாதியாக வலம் வருகிறார் சீமான். அவர் சமீபத்தில் மேடை ஒன்றில் பேசிய பொழுது இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் தேவர்களின் பிள்ளைகளாக இருந்தது போய் சாத்தான்களின் பிள்ளைகளாக மாறிவிட்டனர் என்று பேசியிருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் சீமானின் இந்த பேச்சு சமூக வெறுப்பை விதைக்கும் என்று கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். குறிப்பாக நடிகர் ராஜ்கிரண் தனது முகநூல் பதிவில் இஸ்லாமியர்கள் மீது எவ்வளவு வெறுப்பை கொட்டினாலும் அவர்கள் பிறருக்கு உதவி செய்து கொண்டு, நபிகள் காட்டிய வழியில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால் விளைவு மோசமாக இருக்கும் என்று காட்டமாக பதிவிட்டு இருந்தார்.

தொடர்புடையவை  தனுஷின் நானே வருவேன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வீரா சூரா' லிரிக் பாடல் வெளியாகியுள்ளது

முஸ்லீம்களும் கிறித்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் என பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது.! 3

விளம்பரம்

இந்த நிலையில் தற்போது அது குறித்து விளக்கம் அளித்திருக்கும் சீமான், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன், அப்படியே மன்னிப்பு கேட்பதாக இருந்தால் அவர்கள் எல்லாம் எனக்கு ஓட்டு போடவா போகிறார்கள்? என்று மீண்டும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். மேலும் ராஜ்கிரண் எல்லாம் எந்த முஸ்லிமிற்காக போராடினார் என்று காட்டமாக கேள்வி எழுப்பி இருக்கிறார். முஸ்லிம்களுக்காக போராடிய ஒரே ஆள் பழனி பாபா தான். அதற்கு பின்னர் குடியுரிமை சட்டத்திற்காக கடுமையாக எதிர்த்தது நான்தான். ஆனால் இவர்களெல்லாம் இப்பொழுது பேசுவதற்கு தகுதியை இல்லை என்று சொல்லி காட்டமாக விமர்சித்திருக்கிறார். நீங்களும் அவரின் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits:

விளம்பரம்

Leave a Comment