சிறகடிக்க ஆசை சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பிஏ கடைசியாக போன் செய்த நம்பரில் இருந்து தற்போது போலீசார் அழைக்கும் பொழுது அந்த கால் ரோகிணிக்கு வருகிறது. எனவே ரோகிணி தற்போது கையும் களவுமாக மாட்டிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது சீரியல் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி குறுகிய காலத்திலேயே டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்த ஒரு நிகழ்ச்சி என்று சொன்னால் அது சிறகடிக்க ஆசை சீரியல் தான். இந்த சீரியல் தற்போது பரபரப்பான கட்டங்களை எட்டி வருகிறது. இன்றைய எபிசோடில் மனோஜ்க்கும் ரோகிணிக்கும் திருமணம் முடிந்து அனைவரும் வீட்டிற்கு வருகை தந்திருக்கின்றனர். அதே சமயம் பி ஏ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போலீசார் பிஏவின் மொபைலில் இருந்து கடைசியாக யாருக்கு கால் சென்றது என்பதை ஆராய்ந்து தற்போது முத்துவை தேடி அவரது வீட்டிற்கு வந்திருக்கின்றனர். முத்து விடம் விசாரணை நடத்தும் பொழுது தன்னுடைய காரில் தான் அவர் வந்து கொண்டிருந்ததாகவும், ஒரு பெண்ணைப் பற்றி அவர் தவறாக பேசிக் கொண்டிருந்ததாகவும் போலீசாரிடம் முத்து விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து பி.ஏவின் நம்பரில் இருந்து கடைசியாக யாருக்கு போன் சென்றது என்று குறித்து போலீசார் ஆராய்கின்றனர். அப்போது போலீசார் பிஏ-வின் மொபைலில் இருந்து சென்ற கடைசி நம்பருக்கு கால் செய்து பார்க்கின்றனர். அப்போது அந்த கால் ரோகிணி மொபைலுக்கு வருகிறது. உடனே போலீசார் இந்த பெண்ணின் நம்பருக்கு தான் பிஏ கடைசியாக முயற்சி செய்திருப்பதாக கூறுகிறார்.

இதனால் அதிர்ச்சியில் உறைந்து போகிறார் ரோகிணி. அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. தற்போது முத்து ரோகிணியை சந்தேக கண்ணுடன் பார்க்கிறார். பிஏ எதற்காக ரோகினிக்கு கால் செய்ய வேண்டும் காரில் அமர்ந்து கொண்டு பி ஏ பேசி வந்தது ரோகிணி பற்றி தானா என்பதெல்லாம் முத்துவிற்கு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரோகிணி மாட்டுவாரா அவருக்கும் பி.ஏவிற்கும் உள்ள தொடர்பு என்பது வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிய வருமா என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television