தாலியை வாங்க மறுக்கும் எழில்.! அதிர்ச்சியில் உறைந்த கயல்.! கயல் எழில் திருமணம் நடக்குமா?

கயல் சீரியலில் நாளைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கயலை காப்பாற்றி அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார் எழில். தற்போது ஆர்த்தியின் கழுத்தில் தாலி கட்ட ஐயர் தாலியை எடுத்து கொடுக்கும் பொழுது அதை வாங்க மறுக்கிறார் எழில். அந்த ப்ரோமோவை தற்போது சன் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாத அளவிற்கு நாளுக்கு நாள் விறுவிறுப்பை கூட்டி வருகிறது. அந்த வகையில் கயலுக்கும் எழிலுக்கும் திருமண நடைபெறும் என்கிற பரபரப்புடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. கயலை கடத்திச் சென்ற கௌதமிடமிருந்து மீண்டும் காப்பாற்றி அழைத்து வந்திருக்கிறார் எழில். இந்த நிலையில் மண்டபத்தில் ஆர்த்தியுடன் மணக் கோலத்தில் அமர்ந்திருக்கிறார் எழில். ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தாலியை வாங்க மறுக்கும் எழில்.! அதிர்ச்சியில் உறைந்த கயல்.! கயல் எழில் திருமணம் நடக்குமா? 1

விளம்பரம்

மேலும் கயல் அங்கு இருக்கும் அனைவரிடமும் தாலியை கொடுத்து ஆசீர்வாதம் வாங்க எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார். அதை கவனித்த கயலின் பெரியப்பா இது நம் கழுத்தில் ஏற வேண்டிய தாலி, இப்பொழுது வேறு ஒருவர் கட்டிக் கொள்ளப் போகிறாரே என்று கயல் மனதில் எண்ணம் ஏற்படும் என்று அவரது மனைவியிடம் கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் கயல் எதையும் எதிர்பார்க்காமல் தாலியை எடுத்துக் கொண்டு அனைவரும் ஆசிர்வாதம் வாங்கி வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அய்யர் தாலியை எடுத்து எழிலின் கைகளில் கொடுக்க அதை வாங்காமல் மறுத்து கயலின் முகத்தை பார்க்கிறார் எழில். இதனால் அடுத்து என்ன நடக்குமோ என்கிற பரபரப்பு எழுந்திருக்கிறது.

தொடர்புடையவை  ஜிபி முத்து அப்பா மாதிரி.! ஜிபி முத்துவை அழ வைத்த தனலட்சுமியை வெளுத்து வாங்கிய ஜனனி

தாலியை வாங்க மறுக்கும் எழில்.! அதிர்ச்சியில் உறைந்த கயல்.! கயல் எழில் திருமணம் நடக்குமா? 3

விளம்பரம்

கடந்த ஒரு மாதமாக கயலுக்கும் ஆர்த்திக்கும் திருமண வரவேற்பு நடப்பது போல காட்டப்பட்டு வந்தது. கதை நகராமல் ஒரே இடத்திலேயே நின்று கொண்டிருந்தது. இது கயல் ரசிகர்கள் பலருக்கும் சோர்வை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இந்த சீரியல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இருக்கிறது. அடுத்த நகர்வாக கயலின் கழுத்தில் எழில் தாலி கட்டுவாரா என்கிற எதிர்பார்ப்பும் பரபரப்பும் தொற்றிக் கொண்டுள்ளது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்

Leave a Comment