எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஒரு புறம் ஆதிரை அருணைத் தேடி சாருலதா வீட்டிற்கு சென்றிருக்கிறார். மற்றொருபுறம் வளவனை தேடி ஆதி குணசேகரன் சென்று இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் நடுவில் ஜனனி ஜீவானந்தம் யார் என்பதை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். இப்படியாக எதிர்நீச்சல் சீரியல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று வீட்டில் நடந்த பிரச்சனையில் ஆதிரை இன்றைக்குள் ஒரு முடிவு தெரிந்துவிடும், நான் வெளியில் சென்று விட்டேன் திரும்பி வந்து உங்களுக்கு ஒரு முடிவை சொல்கிறேன் என்று கூறிவிட்டு கரிகாலன் மற்றும் அவரது தாயாரிடம் கோபத்துடன் கூறிவிட்டு செல்கிறார். ஒரு முடிவு தெரியும் வரை நான் இங்கிருந்து நகரப் போவதில்லை என்று சொல்லி ஜான்சி ராணி குணசேகரன் வீட்டிலேயே அமர்ந்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றைக்கு ஒரு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஆதிரை அருணைத் தேடி அவரது வீட்டிற்கு சென்று இருக்கிறார். அப்போது அருண் இனி ஆதிரை என்கிற பெண் எனது வாழ்க்கையில் இல்லை என்று கூறிவிட்டு கோபத்துடன் செல்கிறான். இதனால் ஆதிரையை அருண் முற்றிலுமாக நிராகரித்து விடுவார் என்றே தெரிகிறது. இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் முன்னாள் போலீஸ் அதிகாரியை தேடி சென்றிருக்கும் ஆதி குணசேகரன் புது குண்டை தூக்கி போடுகிறார். கையை ஆட்டி ஆட்டி பேசிக்கொண்டிருக்கும் குணசேகரனைப் பார்த்த வளவன் என்னப்பா கையை ஆட்டி பேசுகிறாய் என்று கேட்க அதெல்லாம் என்னால் செய்ய முடியும், என்னால் கையை நகர்த்த முடியும் நான் சும்மா நாடகமாடினேன் என்று உண்மைகளை போட்டு உடைத்து விடுகிறார். இதை பார்த்த கதிர் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.

சொத்தை மருமகள்கள் மீட்டு தன்னிடம் வந்து சேர்க்க வேண்டும் என்பதற்காக ஆதி குணசேகரன் இது போன்ற நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். இது நந்தினிக்கு ஏற்கனவே சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அது உறுதியாகி இருக்கிறது. ரசிகர்கள் பலரும் குணசேகரனை திட்டியும் தீர்த்து வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV