இதுதான் நான் வாங்கிய பெரிய குழந்தை.! குடும்பத்துடன் சென்று பெரிய விஷயம் செய்த எதிர்நீச்சல் ஜனனி.!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மதுமிதா தற்போது மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார். சாந்தமான படித்த பெண்ணாக வரும் இவர் பெண்களை அடிமைத்தனமாக நடத்தும் ஆதி குணசேகரனை எதிர்த்து கேள்வி கேட்பது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது புகழ்பெற்றிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதுதான் நான் வாங்கிய பெரிய குழந்தை.! குடும்பத்துடன் சென்று பெரிய விஷயம் செய்த எதிர்நீச்சல் ஜனனி.! 1
பெங்களூருவை சேர்ந்த மதுமிதா கன்னட சீரியல்களில் நடிகையாக அறிமுகமானார். நான்கு வருடங்களாக கன்னட சீரியல்களில் நடித்து வந்த இவர் தமிழில் சீரியலில் நடிக்க வேண்டும் என்று மிக ஆர்வத்துடன் இருந்து வந்துள்ளார். அந்த வகையில் அவருக்கு தமிழில் டாப் ஹிட் தொடராக இருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியலில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் ஆதி குணசேகரன் வீட்டில் நான்காவது மருமகளாக நடித்து வருகிறார் மதுமிதா.

விளம்பரம்

இதுதான் நான் வாங்கிய பெரிய குழந்தை.! குடும்பத்துடன் சென்று பெரிய விஷயம் செய்த எதிர்நீச்சல் ஜனனி.! 3
மதுமிதாவின் கதாபாத்திரம் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் பலருக்கும் மிக ஃபேவரட்டான கதாபாத்திரமாக இருந்து வருகிறது. பலரும் மதுமிதாவின் ரசிகர்களாக மாறிப் போயிருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் எதிர்நீச்சல் சீரியலில் வரும் பலருக்கும் அவர்களின் உண்மையான பெயரை விட சீரியலில் இருக்கும் கதாபாத்திரத்தின் பெயரில் தான் தற்போது பலரும் அழைத்து வருகின்றனர். அதுபோலத்தான் மதுமிதாவை பலரும் ஜனனி என்று அழைத்து வருகின்றனர்.

தொடர்புடையவை  இனியாவுக்காக பாக்யா செய்த செயல்..! பாக்யா நடிப்பை பார்த்து கண்ணு கலங்குது.!

இதுதான் நான் வாங்கிய பெரிய குழந்தை.! குடும்பத்துடன் சென்று பெரிய விஷயம் செய்த எதிர்நீச்சல் ஜனனி.! 5
இந்த நிலையில் தற்போது ஜனனி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவிற்கு லைக்குக் குவிந்து வருகிறது. ஜனனி கியா சோனட் என்கிற ஒரு உயர் ரக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த வீடியோவை பகிர்ந்த அவர், “இந்த கார் வாங்குவது என்னுடைய கனவு, இந்தக் கனவை நான் நிஜமாக்கி இருக்கிறேன், நான் வாங்கிய மிகப் பெரிய குழந்தை இதுதான்” என்று பதிவிட்டு இருக்கிறார். அந்தக் காரின் விலை சுமார் 18 முதல் 20 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment