விஜய் தேவார கொண்டாவுடன் செம்ம ரொமான்ஸ் செய்யும் சமந்தா.! குஷி ட்ரைலர் வெளியானது.!

நடிகர் விஜய் தேவார கொண்டாவுடன் இணைந்து சமந்தா நடித்துள்ள குஷி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. ட்ரைலர் வெளியான சில நிமிடங்களில் பல லட்சம் பார்வையாளர்களை பெற்று இந்த ட்ரைலர் சாதனை படைத்திருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் தற்போது விஜய் தேவார கொண்டவுடன் இணைந்து குஷி என்கிற படத்தில் நடித்திருக்கிறார். விஜய் தேவார கொண்டாவில் உடல் கட்டமைப்புக்கும் அழகிய தோற்றத்திற்காகவே இவருக்கு என்று பல ரசிகைகள் இருந்து வருகின்றனர். இவர் தற்போது முதல் முறையாக சமந்தாவுடன் இணைந்து நடித்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் ஆராத்யா என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் தேவார கொண்டாவுடன் செம்ம ரொமான்ஸ் செய்யும் சமந்தா.! குஷி ட்ரைலர் வெளியானது.! 1

விளம்பரம்

திருமணம் ஆன கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சிகளை மையமாக வைத்து அந்த பாடல் எடுக்கப்பட்டிருந்தது. இதனால் விஜய் தேவாரக் கொண்டாவும் சமந்தாவும் காதல் கலந்த ஒரு வித்தியாசமான கதையில் நடித்திருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் டிரைலர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. இதில் விஜய் தேவார கொண்டா, சமந்தா உட்பட பலரும் கலந்து கொண்டனர். இப்போது வெளியாகியிருக்கும் டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முழுக்க முழுக்க காதல் பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளதை ட்ரைலர் தற்போது உறுதி செய்துள்ளது.

தொடர்புடையவை  CWC அஸ்வின் நடிக்கும் செம்பி படத்தின் ட்ரைலர் வெளியானது..கோவை சரளா ஆக்டிங் சும்மா தெறி

விஜய் தேவார கொண்டாவுடன் செம்ம ரொமான்ஸ் செய்யும் சமந்தா.! குஷி ட்ரைலர் வெளியானது.! 3

விளம்பரம்

உண்மையான கணவன் மனைவி போல இவர்கள் இருவரும் இந்த படம் முழுக்க ரொமான்ஸ் செய்திருப்பதை ட்ரைலரை பார்க்கும் பொழுது தெரிகிறது. காஷ்மீரில் இருந்து இவர்கள் இருவரின் காதல் கதை தொடங்குகிறது. பின்னர் பல மோதல்கள், கணவன் மனைவிக்குள் நடக்கும் ஈகோவை பின்னணியாக கொண்டு இந்த படம் உருவாகி இருக்கிறது. சிலர் இந்த படத்தை பார்க்கும் பொழுது சீதாராமன் படம் போல இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வரும் சமந்தாவிற்கு இந்த படம் வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற செப்டம்பர் ஒன்றாம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் இந்த படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. நீங்களும் அந்த ட்ரைலரைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Saregama Tamil

விளம்பரம்

Leave a Comment