தனம் பற்றிய உண்மைகளை தெரிந்துகொண்டு நொறுங்கி போன கதிர்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் promo.!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது முல்லை மற்றும் தனம் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கதிர் கேட்டு விடுகிறார். பின்னர் முல்லையை அழைத்து தனியாக விசாரிக்கும் கதிர், தனத்திற்கு மார்பகப் புற்று நோய் இருந்த செய்தியை அறிந்து கொள்கிறார். இதனால் அவர் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் தொடராக இருந்து வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. அடுத்தடுத்த பரபரப்பான கட்டங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் தற்போது மூத்த மருமகளாக இருக்கும் தனத்திற்கு மார்பக புற்று நோய் இருக்கிறது. இதற்காக அவர் மருத்துவமனையில் சென்று அறுவை சிகிச்சையும் செய்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனம் பற்றிய உண்மைகளை தெரிந்துகொண்டு நொறுங்கி போன கதிர்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் promo.! 1

விளம்பரம்

குடும்பத்தினர் யாருக்கும் தெரியாமல் தனத்தை திருச்சி வரை அழைத்து சென்று அங்கு அவருக்கு அறுவை சிகிச்சையை தற்போது முடித்து இருக்கின்றனர். இந்த விஷயம் மூர்த்தி, கதிர் உட்பட யாருக்குமே தெரியாது. இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தனம் அடுப்படியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கே வரும் முல்லை உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது நீங்கள் இப்போது இந்த வேலைகளை எல்லாம் பார்க்க வேண்டாம் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார். அதை கதிர் கேட்டு விடுகிறார். பின்னர் முல்லையை தனியாக அழைத்துச் செல்லும் கதிர் அண்ணியிடம் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன், உண்மையில் என்ன நடந்தது என்று சொல்லுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தொடர்புடையவை  வினையாக மாறிய விளையாட்டு.! சுருண்டு கீழே விழுந்த மைனா.! அலறிய ஹவுஸ்மேட்ஸ். !பிக்பாஸ் ப்ரோமோ..!

தனம் பற்றிய உண்மைகளை தெரிந்துகொண்டு நொறுங்கி போன கதிர்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் promo.! 3

விளம்பரம்

அப்போது முல்லை கதிரிடம் தனத்துக்கு புற்றுநோய் இருந்த விஷயத்தையும் அறுவை சிகிச்சைக்காக அவரை திருச்சி வரை அழைத்துச் சென்ற உண்மைகளையும் போட்டு உடைத்து விடுகிறார். இதனால் கதிர் அதிர்ச்சிக்குள்ளாகிறார். இதனால் என்ன நடக்கும்.? கதிர் மூர்த்தியிடம் இந்த உண்மைகளை கூறுவாரா.? மூர்த்தி இந்த விஷயத்தை எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment