தென்றல் வந்து என்னை தொடும் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் வெற்றியின் அப்பாவின் ஆசியை நிறைவேற்றி வைப்பதற்காக அபியை தனது சொந்த ஊருக்கு வெற்றி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார். அங்கு அவருக்கு முதல் மரியாதை தர வேண்டும் என்றும் வெற்றி திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார். இதற்காக அபியை தனது சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறார் வெற்றி. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியின் தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் அபி தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தின் கலெக்டராக இருக்கிறார். அவருக்கு சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. மாவட்டத்தில் இளம் பெண்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றனர். இது கலெக்டராக இருக்கும் அபிக்கு மிகப்பெரிய பிரச்சனையாக ஏற்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அபி பரமு என்பவர்தான் குற்றவாளி என நினைத்துக் கொண்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார். ஆனால் உண்மையாக பெண்களை கடத்துபவர்கள் மற்றொரு பெண் என்பது வெற்றிக்கு தெரியும். இந்த நிலையில் வெற்றியின் ஊரில் தற்போது திருவிழா நடைபெறுகிறது. அதற்காக அபியை அழைத்துச் செல்ல வேண்டும் என்று வெற்றி திட்டமிடுகிறார். அபியை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று அவருக்கு முதல் மரியாதை செய்ய வேண்டும் என்று அபியின் தந்தை விரும்பியதாக கூறப்படுகிறது. எனவே அபியை தன்னுடன் அழைத்துச் செல்ல வெற்றி திட்டம் போடுகிறார். அபியும் அதற்கு சம்மதிக்கிறார்ர தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அபி சென்று கொண்டிருந்த காரின் ரேடியேட்டர் வெடித்து விடுகிறது. அப்போது வெற்றியின் காரில் அபி ஏறி விடுகிறார்.

வெற்றியின் கார் எனத் தெரியாமலேயே அந்த காரில் ஏறி விடுகிறார் அபி. பின்னர் வெற்றியுடன் இணைந்து சொந்த ஊருக்கு செல்கிறார். அவர்கள் இருவரையும் ஆரத்தி எடுத்து ஊர் மக்கள் வரவேற்கின்றனர். அப்போது அபியின் கைகளை பிடித்துக் கொள்கிறார் வெற்றி. அதை தட்டிவிடும் அபியிடம் நாம் இருவரும் கணவன் மனைவியாக வரவேண்டும் என்பதுதான் எனது தந்தையின் கனவு. அதற்காக ஊர் மக்களிடம் கொஞ்சம் நடிக்க வேண்டும் என்று சொல்லி அபியின் கைகளை பிடித்துக் கொள்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television