நடிகர் சத்யராஜ் வீட்டில் நடந்த திடீர் மரணம்.! சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்.!

பிரபல நடிகர் சத்யராஜ் அவர்களின் தாயார் தற்போது காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 94. பிரபல நடிகராக இருக்கும் சத்யராஜி தாயார் நாதாம்பாள் சுப்பையா இன்று கோவையில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்திருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பட சூட்டிங்க்காக ஹைதராபாத் சென்றிருந்த சத்யராஜ் மற்றும் அவரது மகன் சிபிராஜ் ஆகியோர் கோயம்புத்தூருக்கு விரைந்து இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக வெற்றியடைந்தவர் நடிகர் சத்யராஜ். ஹீரோவாக நடித்தாலும் தனது கோயம்புத்தூர் குசும்பை திரைப்படங்களில் வெளிப்படுத்தி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் கவர்ந்திருந்தார் ரஜினி, கமல், விஜயகாந்த் என்று பலருக்கு மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருந்தார் சத்யராஜ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.! 

நடிகர் சத்யராஜ் வீட்டில் நடந்த திடீர் மரணம்.! சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்.! 1

விளம்பரம்

இந்த நிலையில் 94 வயதாகும் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் தற்போது வயது மூப்பின் காரணமாக உயிரிழந்திருக்கிறார். வயது மூப்பின் காரணமாக பல வருடங்களாகவே அவதிப்பட்டு வந்த அவர் இன்று மாலை 4 மணி அளவில் உயிரிழந்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கோயம்புத்தூரில் வசித்து வந்த நாதாம்பாள் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக தற்போது சத்யராஜ் அவரது மகன் சிபிராஜ் உள்ளிட்டோர் கோயம்புத்தூருக்கு விரைந்து இருக்கின்றனர். படப்பிடிப்பிற்காக சத்யராஜ் தற்போது ஹைதராபாத்தில் இருக்கும் நிலையில் அவர் படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு கோவைக்கு விரைந்துள்ளார். இறுதி சடங்குகள் நாளை மதியம் மூன்று மணி அளவில் நடைபெறும் என்று கூறப்பட்டிருக்கிறது.

தொடர்புடையவை  திருநங்கைகளை கொச்சைப்படுத்துகிறதா! "லட்சுமி பாம்" ?

நடிகர் சத்யராஜ் வீட்டில் நடந்த திடீர் மரணம்.! சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்.! 3

விளம்பரம்

நாதாம்பாளுக்கு சத்யராஜ் ஒரே மகன் ஆவார். மேலும் கல்பனா மன்றாடியார், ரூபா சேதுபதி என்ற இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். தற்போது சத்யராஜின் தாயார் உடல் நலக் குறைவால் உயிரிழந்துள்ள செய்தி அவரது ரசிகர்களையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் அவரது மறைவிற்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். பாட்டியின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக சத்யராஜின் மகனுமான சிபிராஜ் மற்றும் மகள் திவ்யா ஆகியோரும் தற்போது கோயம்புத்தூருக்கு விரைந்துள்ளனர் என்பதை குறிப்பிடத்தக்கது..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Thanthi TV

விளம்பரம்

Leave a Comment