சந்திரமுகி 2 படத்தின் First சிங்கிள் “ஸ்வாகதாஞ்சலி” வெளியானது.! இதோ வீடியோ.!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரமுகி 2 படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடலாக தற்போது “சுவாகதாஞ்சலி” என்கிற பாடலின் லிரிக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இதில் கங்கனா சந்திரமுகியாக மாறி தற்போது நடனம் ஆடி இருக்கிறார். வேட்டையன் ராஜாவாக நடிகர் ராகவா லாரன்ஸ் இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகப் பிடித்த பாடலாக இருக்கும் ரா ரா பாடலை தற்போது ரீ கிரியேட் செய்திருப்பது போல இந்த பாடல் வெளியாகி இருக்கிறது. 90களில் மத்தியில் பிறந்தவர்களுக்கு சந்திரமுகி திரைப்படம் பயம் கலந்த திரைப்பட அனுபவத்தை கொடுத்த ஒரு படமாகும். இந்தத் திரைப்படத்தை பார்த்து பயந்து அலறிய 90ஸ் கிட்ஸ் பலர் உண்டு. இந்த திரைப்படம் தற்போது இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சந்திரமுகி 2 படத்தின் First சிங்கிள் "ஸ்வாகதாஞ்சலி" வெளியானது.! இதோ வீடியோ.! 1

விளம்பரம்

முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் ரஜினி நடித்திருந்த வேட்டையனாகவும், கங்கனா ரணாவத் சந்திரமுகியாகவும் நடித்திருக்கின்றனர். மேலும் இவர்களுடன் ராதிகா சரத்குமார், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படம் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த அப்டேட் குறித்து ரசிகர்கள் காத்திருக்கின்ற நிலையில் தற்போது முதல் அப்டேட்டாக சுவாகதாஞ்சலி என்கிற பாடலின் லிரிக்ஸ் வீடியோவை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இந்த பாடலை பார்க்கும்போது ரா ரா பாடலை கேட்பது போலவே இருக்கிறது. பரதநாட்டிய கலைஞராக இருக்கும் கங்கனா அரண்மனையில் நடனமாடிக் கொண்டிருக்கிறார்.

தொடர்புடையவை  அக்கா வாங்க ஒரு போட்டோ எடுத்துக்கலாம்.! ராதிகா தோள் மீது கை போட்டு செம்ம கூலாக போஸ் கொடுத்த தளபதி.!

சந்திரமுகி 2 படத்தின் First சிங்கிள் "ஸ்வாகதாஞ்சலி" வெளியானது.! இதோ வீடியோ.! 3

விளம்பரம்

மேலும் வேட்டையன் ராஜாவாக இருக்கும் ராகவா லாரன்ஸ் குதிரையில் வந்து கொண்டிருப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு எம் எம் கீரவாணி இசையமைத்திருக்கிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இந்த நடனத்திற்கு கலா மாஸ்டர் கோரியோகிராபராக பணியாற்றி இருக்கிறார். தற்போது வெளியாகி இருக்கும் அந்த பாடலை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sony Music South

விளம்பரம்

Leave a Comment