லட்சுமி மேனனுடன் திருமணமா.? பூதாகரமான செய்தி.! உண்மைகளை உடைத்த விஷால்.!

சில நாட்களாக நடிகர் விஷாலுக்கும் லட்சுமிமேன்னுக்கும் திருமணம் என்ற தகவல் இணையத்தில் தீயாக பரவி வந்த நிலையில், தற்போது விஷால் அது குறித்து அதிகாரப்பூர்வமாக விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். லட்சுமிமேனன் உடனான காதல் குறித்து சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது. விஷாலும் லட்சுமிமேனனும் இருவரும் விரைவில் திருமணம் செய்யப் போகிறார்கள் என்கிற தகவல் வெளியானது தொடங்கி, கோலிவுட்டில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. தற்போது அது குறித்து விஷால் விளக்கம் அளித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக அறிமுகமாகி பின்னர் தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷால். 33 படங்களில் நடித்து முடித்துள்ள அவர், தற்போது 34-ஆவது படத்தில் நடித்து வருகிறார். பல காலமாக ஹிட் படங்களை கொடுத்த அவர் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வருகிறார்.

லட்சுமி மேனனுடன் திருமணமா.? பூதாகரமான செய்தி.! உண்மைகளை உடைத்த விஷால்.! 1

விளம்பரம்

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வீரமே வாகை சூடும், லத்தி போன்ற படங்கள் தோல்வியை சந்தித்தன. தற்போது அவர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் டைம் ட்ராவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் விஷாலுடன், செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, ரித்து வருமா போன்ற பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்திக்கு ரிலீசாக இருக்கிறது. படங்களில் பிஸியாக நடித்து வரும் விஷால் குறித்து இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவியது. அதில் நடிகை லட்சுமிமேனனும் விஷாலும் தீவிரமாக காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் பரவியது. தற்போது இது குறித்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.

தொடர்புடையவை  கார்த்தி போலீசாக மிரட்டும் வா வாத்தியாரே டீசர் இதோ..!

லட்சுமி மேனனுடன் திருமணமா.? பூதாகரமான செய்தி.! உண்மைகளை உடைத்த விஷால்.! 3

விளம்பரம்

அதில் பொதுவாக இது போன்ற பொய்யான செய்திகளுக்கும் வதந்திகளுக்கும் நான் பதிலளிப்பது இல்லை. ஏனென்றால் அது அனைத்தும் பயனற்றது என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். ஆனால் இந்த முறை லட்சுமி மேனன் உடன் திருமணம் என்று செய்தியை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். எந்தவிதமான அடிப்படை ஆதாரமற்ற தகவல் அது. ஒரு நடிகை என்பதைத் தாண்டி அவர் ஒரு பெண் என்பதால் நான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன். ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அடையாளத்தையும் இது போன்ற பொய்யான வதந்திகளால் கெடுத்து விடாதீர்கள். நான் யாரை திருமணம் செய்ய போகிறேன் என்பது ஒன்றும் அவ்வளவு பெரிய பெர்முடா முக்கோணம் கிடையாது. நேரம் வரும்போது நானே எனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என்று சொல்லி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் விஷால்..!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment