சரத்துக்குமாருக்கு பக்கா வில்லனாக மாறிய சசிகுமார்.! நா நா படத்தின் ட்ரைலர் வெளியானது.!

நடிகர் சரத்குமார் மற்றும் சசிகுமார் ஆகிய இருவரும் நடித்திருக்கும் “நா நா” படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னால் சசிகுமார் தற்போது வித்தியாசமான கதைக்களத்தில் நடித்திருக்கிறார். இயக்குனராக இருந்து பின்னர் நடிகராக அவதாரம் எடுத்தவர் சசிகுமார். சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மூலமாக நடிகராக அவதாரம் எடுத்த அவர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமையாளராகவும் விளங்கி வருகிறார். சுப்பிரமணியபுரம் வெளியாகி 15 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதற்கு முன்பாக கடந்த வருடம் சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ந்து நந்தன் மற்றும் பகைவனுக்கு அருள்வாய் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் சசிகுமார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சரத்துக்குமாருக்கு பக்கா வில்லனாக மாறிய சசிகுமார்.! நா நா படத்தின் ட்ரைலர் வெளியானது.! 1

விளம்பரம்

தற்போது சசிகுமார் சரத்குமாருடன் இணைந்து “நா நா” என்கிற படத்தில் நடித்து வருகிறார். சரத்குமார் சமீப காலமாக போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தி வருகிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான போர்த் தொழில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து தற்போது விஐபி பட வில்லன் அமிதாஷ் பிரதானுடன் இணைந்து பரம்பொருள் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் நிறங்கள் மூன்று, தி ஸ்மைல் மேன், ஆழி போன்ற படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சசிகுமார் மற்றும் சரத்குமார் இருவரும் இணைந்து நடித்துள்ள “நா நா” திரைப்படம் ட்ரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது் பூபதி ராஜா வசனம் எழுத. இயக்குனர் என்.வி நிர்மல் குமார் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். மேலும் இவர்களுடன் பாரதிராஜா, ரேஷ்மா வெங்கட், சித்ரா சுக்லா, டெல்லி கணேஷ், பிரதீப் ராபர்ட் போன்ற பல முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

தொடர்புடையவை  மாடியில் இருந்து சக்தி தள்ளிவிட்டு கரு கலைந்து விட்டதாக நாடகம் ஆடிய ஸ்ருதி, அதிர்ச்சியில் தருண்

சரத்துக்குமாருக்கு பக்கா வில்லனாக மாறிய சசிகுமார்.! நா நா படத்தின் ட்ரைலர் வெளியானது.! 3

விளம்பரம்

இந்தப் படத்திற்கு ஹர்ஷவர்த்தன் ரமேஷ்வர் இசையமைத்திருக்கிறார். சென்னையில் ஒரு நாள், சுட்டு பிடிக்க உத்தரவு போன்ற படங்களை தயாரித்த பிகே ராம் மோகன் தனது கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் இந்த படத்தை ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாக்கி இருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் இந்த படத்தின் ட்ரைலரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment