கடந்த சில நாட்களுக்கு முன்பாக விஜய் ரசிகர் ஒருவரை தியேட்டர் வாசலிலேயே வைத்து ரஜினி ரசிகர்கள் அடித்து துவைத்தனர். அதற்கு காரணம் தெரியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது அந்த முழு வீடியோவை சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் வெளியிட்டு இருக்கிறது. பலரும் அது விஜய் ரசிகரே கிடையாது. விஜய் ரசிகருக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே சண்டை மூட்டுகிறார்கள் என்று கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், அந்த வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் அடிவாங்கியவர் விஜய் ரசிகர் என்பது உறுதியாகி இருக்கிறது. எனக்கு ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அது தளபதி தான். நான் லியோ படத்திருக்காக தான் வெயிட்டிங். ஜெயிலர் படத்தை பார்க்க நான் வரவில்லை என்று தியேட்டர் வாசலில் வைத்து அந்த நபர் பேசியதால் ரஜினி ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு தாக்கியிருக்கும் சம்பவம் நடந்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வாரிசு ஆடியோ லாஞ்சில் தொடங்கிய சூப்பர் ஸ்டார் பிரச்சனை இன்றளவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்கிற சலசலப்பு விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களுடைய எழுந்தது. பின்னர் அது மோதலாக மாறியது. போஸ்டர் ஒட்டி சண்டையை ரசிகர்கள் பெரிதாக்க தொடங்கினர். மேலும் ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பருந்து காகம் கதைகளை கூறி இருந்தார் சூப்பர் ஸ்டார். இது மேலும் பிரச்சனையை கிளப்பியது. விஜயையும் அவரது ரசிகர்களையும் தான் மறைமுகமாக சூப்பர் ஸ்டார் இப்படி விமர்சித்திருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையில் ஜெயிலர் படம் கடந்த பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அப்போது சென்னையில் குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் விஜய் ரசிகர் ஒருவர் ரஜினி ரசிகர்களிடம் அடி வாங்கிய வீடியோ வைரலானது.

விஜய் ரசிகர் ஒருவர் ரஜினியை ஒருமையில் பேசியதால்தான் ரஜினி ரசிகர்கள் கோபத்தில் அவரை அடித்து துவைத்தனர் என்று செய்திகள் வெளியானது. ஆனால் விஜய் ரசிகர்களோ அவர் விஜய் ரசிகர் என்று எப்படி சொல்கிறீர்கள்? அதற்கு ஆதாரமே இல்லை என்று பேசி வந்தனர். தற்போது சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. அதில் பேசும் அந்த நபர் தான் இந்த படத்தை பார்ப்பதற்காக வரவில்லை. தனக்கு எப்போதும் இளையதளபதி விஜய் தான். நான் லியோ படத்திற்காக வெயிட்டிங் என்று சொல்லிவிட்டு ரஜினியை கெட்ட வார்த்தை சொல்லி திட்டினார். இதை பார்த்த ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அவரை தாக்கி இருக்கின்றனர். இதனால் அவர் விஜய் ரசிகர் தான் என்பதும் அவரை அடித்ததற்கான காரணமும் தற்போது தெளிவாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Pattas