காளி வெங்கட், ராம் அருண் காஸ்ட்ரோ இருவரும் ஹீரோவாக கலக்கும் “ஹர்காரா” ட்ரைலர் இதோ.!

இயக்குனர் ராம் அருண் காஸ்ட்ரோ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஹர்காரா. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் ஆகிய இருவரும் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளனர். V1 மர்டர் கேஸ் என்கிற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானவர் ராம் அருண் காஸ்ட்ரோ. இவர் தற்போது ஹர்காரா திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். டிஜிட்டல் வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு மலை கிராமத்திற்கு செல்லும் போஸ்ட்மேன் அங்கு படும் அவஸ்தையையும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையும் பின்னணியாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ட்ரெய்லர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காளி வெங்கட், ராம் அருண் காஸ்ட்ரோ இருவரும் ஹீரோவாக கலக்கும் "ஹர்காரா" ட்ரைலர் இதோ.! 1

விளம்பரம்

இதில் ராம் அருண் காஸ்ட்ரோ, காளி வெங்கட் இருவருமே கதாநாயகர்களாக நடித்திருக்கின்றனர். கதாநாயகியாக கௌதமி நடித்திருக்கிறார். பிச்சைக்காரன் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி தற்போது நிறைவடைந்திருக்கிறது. படப்பிடிப்புகள் தேனி மாவட்டத்திற்கு அருகில் உள்ள மலை கிராமங்களில் நடைபெற்றது. கலர்ஃபுல் பீட்டா மொமண்ட் என்கிற நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இசையமைப்பாளர் ராம் சங்கர் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை வெளியிட இருக்கிறது. வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது.

தொடர்புடையவை  ட்ரெண்டிங்கில் இணைந்த வைகை புயல்.! பாடலுக்கு மரண குத்தாட்டம்.! தலைவன் செம்ம ஹாப்பியா இருக்காரு போல.!

காளி வெங்கட், ராம் அருண் காஸ்ட்ரோ இருவரும் ஹீரோவாக கலக்கும் "ஹர்காரா" ட்ரைலர் இதோ.! 3

விளம்பரம்

தற்போது இந்த ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Think Music India

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment