மீண்டும் கண்முழித்து வந்த அப்பத்தா.! விறுவிறுப்பை கூட்டும் எதிர்நீச்சல் சீரியல்.! ப்ரோமோ இதோ

எதிர்நீச்சல் சீரியலில் தற்போது அடுத்த திருப்பமாக படுக்கையில் இருந்த அப்பத்தா தற்போது மீண்டும் எழுந்து வந்திருக்கிறார். இதனால் தற்போது அடுத்த பரபரப்பு எழுந்திருக்கிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பரபரப்புக்கு ஒரு நாளும் பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் இத்தனை நாட்களாக அப்பத்தா கோமா நிலையில் இருந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் எழுந்து வந்திருக்கிறார். அவரிடம் குணசேகரன் சண்டை போடுகிறார். சிங்கம் மாதிரி இருந்த என்னை இப்படி சாய்த்து விட்டாயே என்று அவரிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அப்பத்தா மீண்டும் கண் முழித்து வந்து விட்டதால் அவரின் சொத்துக்களில் என்ன நடந்தது என்கிற உண்மை விரைவில் அனைவருக்கும் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் கண்முழித்து வந்த அப்பத்தா.! விறுவிறுப்பை கூட்டும் எதிர்நீச்சல் சீரியல்.! ப்ரோமோ இதோ 1

விளம்பரம்

தனது சொந்த அப்பத்தாவிடம் 40 சதவீத பங்குகளை பறித்துக் கொண்ட குணசேகரனால் அப்பத்தா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார். அவர் படுத்த படுக்கையாக கோமாவில் படுத்து விட்டார். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஜீவானந்தம் அவரது கைரேகையை எடுத்துக்கொண்டு அவரை 40 சதவீத பங்குகளை திருடி விட்டார். இதனால் குணசேகரன் மற்றும் குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர். ஜீவானந்தம் யார்? அவர் எதற்காக அப்பத்தாவின் சொத்துக்களை பறித்துக் கொண்டார்? கோமாவில் இருந்த அப்பத்தா அடிக்கடி எழுந்து எதற்காக ஜீவானந்தம் பெயரை சொல்ல வேண்டும்? என்கிற பல குழப்பங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையில் ஒரு புறம் குணசேகரன் வளவனை வைத்து ஜீவானந்தத்தை தீர்த்து கட்ட முடிவு செய்கிறார். மறுபுறம் ஜனனி ஜீவானந்தத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.

தொடர்புடையவை  பாடகர் கிரிஷ் - சங்கீதா தம்பதிகளின் வீட்டை பார்த்து இருக்கீங்களா.? Home Tour வீடியோ இதோ.!

மீண்டும் கண்முழித்து வந்த அப்பத்தா.! விறுவிறுப்பை கூட்டும் எதிர்நீச்சல் சீரியல்.! ப்ரோமோ இதோ 3

விளம்பரம்

அப்பத்தா மீண்டும் எழுந்து வந்தால்தான் இதற்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்கும் என்று ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது அது நடந்திருக்கிறது. மீண்டும் அப்பத்தா கண் விழித்திருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment