சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலின் நாளைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கயலின் பெரியப்பா தர்மலிங்கத்திற்கு தற்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது கயல் மற்றும் எழிலுக்கு கயலின் பெரியம்மா வடிவு சாபம் விட்டுக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலை பார்க்காதவர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் டி ஆர் பி ரேட்டிங்கிலும் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இதில் கயலுக்கும் எழிலுக்கும் திருமணம் நடக்குமா நடக்காதா என்கிற பரபரப்புடன் தற்போது இந்த சீரியலில் ஒளிபரப்பாகி வருகிறது. கடைசியில் எழிலுக்கு திருமணம் செய்து வைக்க இருந்த ஆர்த்தியின் கழுத்தில் எழிலின் நண்பர் ஆனந்த் தாலி கட்டியிருக்கிறார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் உடல்நிலை குன்றிய கயலின் பெரியப்பா தர்மலிங்கம் தற்போது உயிருக்கு ஆபத்தான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவமனை வாசலில் நின்று கொண்டு நீங்கள் இருவரும் சதி செய்து தானே இப்படி செய்தீர்கள்? உங்கள் இருவரையும் கதரவிடுகிறேன் பார், என்று சொல்லி வடிவு இருவருக்கும் சாபமிட்டு கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV