தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் குளிர் காய்ச்சலால் அவதிப்படும் வெற்றிக்கு தற்போது ஆதரவாக மாறி இருக்கிறார் அபி. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. ப்ரோமோவை பார்த்த பலரும் அபிக்கு கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி மீது பாசம் வருகிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் தற்போது வெற்றியும் அபியும் வெற்றியின் சொந்த கிராமத்திற்கு சென்று இருக்கின்றனர். அங்கு அவர்கள் இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டு மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் வெற்றிக்கு குளிர் ஜுரம் வந்துவிட்டதாகவும், இந்த இரவு மட்டும் வெற்றியை உங்கள் அறையில் படுத்து வைத்துக் கொள்ளுமாறு அபியிடம் வந்து கூறுகின்றனர்.

அபி வெற்றிக்கு தைலம் தேய்த்து விட முயற்சி செய்கிறார். அதன் பின்னர் வெற்றி நான் பிழைத்துக் கொள்வேனா? என அபியிடம் கேட்க, இதைவிட பெரிய பிரச்சனையிலிருந்து எல்லாம் உன்னை காப்பாற்றி இருக்கிறேன். குண்டு பட்டு வந்தபோது தனி ஆளாக இருந்து உன்னை ஆபரேஷன் செய்து காப்பாற்றி இருக்கிறேன். இந்த காய்ச்சலில் இருந்து காப்பாற்ற மாட்டேனா? என்று கேட்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video.!
YouTube Video Embed Code Credits: Vijay Television