பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த அடுத்த விசேஷம்.! ஜெனிக்கு நடந்த வளைகாப்பு.! ப்ரோமோ இதோ

பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஜெனிக்கு வளைகாப்பு நடைபெறுகிறது. குடும்பத்துடன் நடைபெறும் இந்த வளைகாப்பு அழகாக உணர்ச்சி பூர்வமாக இருக்கிறது. பழனிச்சாமி, கோபி என அனைவரும் வந்து இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். மேலும் ஜெனியை வீட்டில் இருக்கும் அனைவரும் கண்ணீருடன் வழியனுப்பி வைக்கின்றனர். பாக்கியலெட்சுமி சீரியலில் பல நாட்களாக கர்ப்பமாக இருந்தது போல் காட்டப்பட்ட ஜெனிக்கு ஒரு வழியாக வளைகாப்பு நடத்தி இருக்கின்றனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த அடுத்த விசேஷம்.! ஜெனிக்கு நடந்த வளைகாப்பு.! ப்ரோமோ இதோ 1

விளம்பரம்

பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த ஒரு சீரியலாக இருந்து வருகிறது. தற்போது இந்த சீரியலில் பாக்கியா கல்லூரிக்கு சென்று படிக்கத் தொடங்கி இருக்கிறார். மேலும் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு அவர் மற்ற வேலைகளையும் பார்த்து வருகிறார். கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் பாக்யாவின் மூத்த மருமகளாக இருக்கும் ஜெனி பல வருடங்களாக கர்ப்பமாக இருப்பது போல காட்டப்பட்டது சீரியல் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இன்னும் எத்தனை நாளுக்கு தான் ஜெனி கர்ப்பமாக இருப்பது போலவே காட்டுவீர்கள் என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

தொடர்புடையவை  திருமண நாள் அன்று கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்த செம்பருத்தி சீரியல் நடிகை.! குவியும் வாழ்த்துக்கள்.!

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த அடுத்த விசேஷம்.! ஜெனிக்கு நடந்த வளைகாப்பு.! ப்ரோமோ இதோ 3

விளம்பரம்

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜெனி மற்றும் செழியன் ஆகியோரையும் அமர வைத்து அனைவரும் நலங்கு வைக்கின்றனர். பின்னர் ஜெனியை கண்ணீர் மல்க வீட்டில் இருக்கும் அனைவரும் அவரது தாயார் வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video.!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment