தென்றல் வந்து என்னை தொடும் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் வெற்றியை அசிங்கமாக பேசிய நபரை அபி பளார் என்று அறை விடுகிறார். ஆனால் வெற்றியின் அம்மாவோ உன்னால் தான் வெற்றியை இது போல் அனைவரும் அசிங்கமாக பேசுகிறார்கள் என்று சொல்லி அபியிடம் கோபமாக சண்டை போடுகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் தற்போது வெற்றி தனது மனைவி அபியை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு திருவிழாவிற்கு செல்கிறார். வெற்றியின் தந்தை திருவிழாவில் அபிக்கு முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தந்தை இறந்த காரணத்தினால் அவரது ஆசையை நிறைவேற்ற அபியை அழைத்துக் கொண்டு செல்கிறார் வெற்றி.
அங்கு செல்லும் வெற்றி மற்றும் அபி இருவருக்கிடையே நெருக்கம் ஏற்படுகிறது. இத்தனை நாள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்த நிலையில், இருவரும் ஒருவரையொருவர் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ள ஆரம்பித்து இருக்கிறார்கள். சிறு சிறு மோதல்கள் இருந்த போதிலும் இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் திருவிழாவில் முதல் மரியாதை வாங்கிக் கொண்டிருக்கும் வெற்றியை பார்த்து ரவுடி ஒருவர் ஆண்மை இல்லாதவன் என்று கூறுகிறார்.

அப்போது கோபமான அபி அவனிடம் நேராக சென்று அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து வெற்றியை ஆம்பளையா இல்லையா என்பதை அவன் பொண்டாட்டி நான் தான் சொல்ல வேண்டும் என்று கூறுகிறார். அப்போது குறுக்கே வரும் வெற்றியின் தாயார் அபியை திட்டுகிறார். உன்னால்தான் வெற்றிக்கு இதுபோல பெயர் வந்தது. நீ மட்டும் உண்மையான மனைவியாக வாழ்ந்து இருந்தால் அவனுக்கு இப்படி ஒரு பெயர் வருமா? என்று கேட்டு அபியை திட்டுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television