ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாட ஆசைப்பட்ட மகன்.! நிறைவேற்றி வைத்த சினேகா.!

தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் சினேகா பிரசன்னா தம்பதிகள் தற்போது தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கின்றனர். அந்த வீடியோவில் தனது மகன் விஹான் பிறந்தநாளுக்கு ஆதரவற்ற ஏழை குழந்தைகளின் இல்லத்திற்கு சென்று அங்கு பிறந்தநாளை கொண்டாடி இருக்கின்றனர். அந்த வீடியோவுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. 2009 ஆம் ஆண்டு அச்சம் உண்டு அச்சம் உண்டு என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது சினேகா பிரசன்னா இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் பெற்றோர் சமூகத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்பு சினேகா நடிப்பதை பெருமளவில் குறைத்து விட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாட ஆசைப்பட்ட மகன்.! நிறைவேற்றி வைத்த சினேகா.! 1

விளம்பரம்

ஆனால் பிரசன்னா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சில படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் பிரசன்னா. இந்த தம்பதிகளுக்கு விஹான் மற்றும் ஆத்யந்தா என்கிற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். சமீபத்தில் விஹானின் பிறந்தநாள் விழாவை கொண்டாடியிருந்தார் சினேகா. அந்த புகைப்படங்களை பகிர்ந்து இருந்த அவர் இன்று ஒரு புதிய வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை பதிவிட்ட அவர், தன் மகனிடம் சென்று உன் பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டேன். அவன் மிகப்பெரிய பட்டியலை கொடுத்தான். ஆனால் அவன் அவனை நினைத்து பெருமை கொள்ளும் வகையில் ஒரு பதில் கூறினான்.

தொடர்புடையவை  அருண் விஜயின் அட்டகாசமான நடிப்பில் வெளியானது "அச்சம் என்பது இல்லையே" டீசர்..! இதோ வீடியோ..!

ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாட ஆசைப்பட்ட மகன்.! நிறைவேற்றி வைத்த சினேகா.! 3

விளம்பரம்

அதில் தனது தங்கை ஆதிந்த்யாவிற்கு கொண்டாடியது போல ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று விஹான் கேட்டுக் கொண்டதால் அந்த ஆசையை சினேகா நிறைவேற்றி வைத்திருக்கிறார். அந்த வீடியோவை அவர் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment