தமிழும் சரஸ்வதியும் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அர்ஜீனை கத்தியால் குத்தியது தமிழ் இல்லை என்பதை வீடியோ ஆதாராத்துடன் கோதையிடம் சரஸ்வதி நிரூபித்து இருக்கிறார் இதனால் கடுப்பான கோதை, அர்ஜுனை வீட்டை விட்டு வெளியே போடா என்று சொல்லி அடித்து துரத்துகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. கோதையின் மருகமன் அர்ஜீன் இத்தனை நாட்களாக கோதையின் மூத்த மகன் தமிழ் தான் தன்னை கத்தியால் குத்தி விட்டதாக கூறி நாடகம் ஆடி வருகிறார். இந்த நாடகத்தை நம்பும் கோதை தனது மகன் தமிழை வீட்டை விட்டு வெளியில் துரத்தி விடுகிறார். தனது மகள் ராகிணியின் பேச்சைக் கொண்டு கேட்டுக்கொண்டு அவர் இவ்வாறு செய்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அர்ஜுனை தமிழ் கத்தியால் குத்தவில்லை அவன் ஆட்களை செட்டப் செய்து இது போல் நாடகமாடி வருகிறான் என்பதை நீரூபிக்க கோதை, நடேசன், தமிழ், சரஸ்வதி, வசு என பலரும் போராடி வந்தனர். ஆனால் இத்தனை நாட்களாக அர்ஜூன் யாரிடமும் மாட்டாமல் எஸ்கேப் ஆகிக்கொண்டே வருகிறான். எப்படியாவது அர்ஜூனின் உண்மை முகத்தை காட்ட வேண்டும் என போராடிய நிலையில் தற்போது அதற்கு தீர்வு கிடைத்துள்ளது. வசுவின் தம்பி ஆதி அர்ஜூன் கத்தியால் குத்துவது போன்று நாடகமாடிய வீடியோவை லேப்டாப்பில் இருந்து பென் ட்ரைவில் ஏற்றி வந்து கொண்டு கோதையின் வீட்டில் அனைவருக்கும் போட்டு காண்பித்து விட்டார். இதனால் கடுப்பான கோதை அர்ஜுனை வீட்டை விட்டு வெளியே போடா என்று கோபத்தில் கத்துகிறார்.

பின்னர் அர்ஜுன் ராகிணியைப் பார்க்க ராகிணியும் அர்ஜுனன் கோபத்தில் முறைத்துப் பார்க்கிறார். இத்தனை நாள் அர்ஜுன் மாட்டுவானா இல்லையா என்று ஏங்கிக் கிடந்த ரசிகர்களுக்கு இந்த ப்ரோமோ மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television