“தனி ஒருவன் 2” குட்டி டீசருடன் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.! இதோ வீடியோ.!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் தனி ஒருவன் 2 படத்தின் டீசரை வெளியிட்டு படக் குழு தற்போது சர்ப்ரைஸ் செய்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம தான் தனி ஒருவன். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை, முதல் முதல் பாகத்தை இயக்கிய அவரது சகோதரரே இயக்க இருக்கிறார். மோகன் ராஜா தானே கதை திரைக்கதை எழுதிய முதல் திரைப்படம் தான் தனி ஒருவன் இந்த படம் மூலம் அரவிந்தசாமியும் வில்லனாக அவதாரம் எடுத்திருந்தார். விறுவிறுப்பான கதைக்களம், ஆக்சன், காதல், அரசியல், எமோஷன் என அனைத்தும் கலந்த ஒரு படமாக தனி ஒருவன் திரைப்படம் வெளியாகி இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"தனி ஒருவன் 2" குட்டி டீசருடன் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.! இதோ வீடியோ.! 1

விளம்பரம்

இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. மீண்டும் தனது அண்ணன் மோகன் ராஜாவுடன் இணைந்து இந்த படத்தில் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. அதற்கான அறிவிப்பை புதிய டீசருடன் வெளியிட்டு இருக்கிறது படக்குழு. முதல் பாகத்தை தயாரித்த ஏஜிஎஸ் சினிமாஸ் தான் இந்த பாகத்தையும் தயாரிக்க இருக்கிறது. படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக இருக்கிறது. முதல் பாகத்தில் ஹீரோவை விட அரவிந்த்சாமியின் வில்லன் கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்தில் யார் வில்லனாக நடிக்க இருக்கிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

தொடர்புடையவை  மலையாள சினிமா பாலியல் குற்றசாட்டுகள் குறித்த கேள்வி..! அதிர்ச்சி பதிலை கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்..!

"தனி ஒருவன் 2" குட்டி டீசருடன் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.! இதோ வீடியோ.! 3

விளம்பரம்

அதேபோல முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த நயன்தாராவே இதிலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை விரைவில் படக் குழுவினர் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Ags Entertainment

விளம்பரம்

Leave a Comment