தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தில் நடித்து அறிமுகமாகிய நடிகர் கார்த்தி. தனது மொத்த நடிப்பையும் காண்பித்து முதல் படத்திலேயே முன்னணி நடிகராக உருவெடுத்து இருந்தார். அந்த அளவிற்கு தனது எதார்த்த நடிப்பினை காண்பித்து அசத்தியிருப்பார். இப்படத்திலேயே முன்னணி நடிகராக உயர்ந்த இவர் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். பல வெற்றிப்படங்களை நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் கொடுத்து இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இவர் நடிகர் அரவிந்த் சாமியுடன் இணைந்து முதல் முறையாக நடித்து உள்ளார். சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் பிரேம்குமார் இயக்கி உள்ளார். கோவிந்த் வசந்த் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்து உள்ளார். இவர்களுடன் நடிகர் ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

இப்படம் வருகிற 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு உள்ளது. டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் டெல்டா கல்யாணம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.
Embed Video Credits : think music india