பாராளுமன்றத்தில் ஒலித்த “அசாணி” பெயர்.! நிரந்தர போட்டியாளராக வாய்ப்பு கொடுத்த ஜீ தமிழ்.!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 3ல் தற்போது நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. போட்டி ஆரம்பித்து மூன்று வாரங்களுக்கு பிறகு வந்த அசாணி என்கிற சிறுமியை தற்போது நிரந்தர போட்டியாளராக அறிவித்துள்ளனர் நடுவர்கள். இதனால் நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ஜீ தமிழில் பாட்டு போட்டி நிகழ்ச்சியான சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் மூன்று வாரங்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து அசாணி என்கிற ஒரு பெண் கலந்து கொண்டார். இலங்கையிலிருந்து சென்னைக்கு வர போதிய காசு இல்லாத காரணத்தினால் அவர் தாமதமாக போட்டிக்கு வந்து சேர்ந்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் ஒலித்த "அசாணி" பெயர்.! நிரந்தர போட்டியாளராக வாய்ப்பு கொடுத்த ஜீ தமிழ்.! 1

விளம்பரம்

தனது தாயும் தந்தையும் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்து தினமும் 200 ரூபாய் மட்டுமே கூலி பெற்று வந்த நிலையில் சென்னைக்கு வர ஒன்றரை லட்சம் செலவாகும் என்பதால் தனது பாட்டு ஆசையை அடக்கிக் கொண்டிருந்தார் அசாணி. பின்னர் ஊர் மக்கள் அனைவரும் இணைந்து தங்களால் என்ற பொருளுதவி செய்து அசாணிக்கு சென்னைக்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர். சென்னைக்கு வந்த அவருக்கு ஸ்ருதி என்றாலே என்னவென்று தெரியாமல் இருந்துள்ளார். ரேடியோவில் மட்டுமே பாடல்களை கேட்டு பாடி வந்த அவரை மூன்று வாரங்கள் வரை பார்ப்போம் என்று நடுவர்கள் கெடு கொடுத்திருந்தனர். அசாணிக்கு போதிய பயிற்சி வழங்கப்பட்டது. மூன்று வாரங்கள் ஆன நிலையில் அவர் இந்த வாரம் ஊரு சனம் தூங்கிருச்சு பாடலை பாடினார்.

தொடர்புடையவை  கோபிக்கு ஒரு வாய் சோறு கூட கொடுக்காமல் கொடுமை படுத்தும் ராதிகா.! இன்றைய ப்ரோமோ.!

பாராளுமன்றத்தில் ஒலித்த "அசாணி" பெயர்.! நிரந்தர போட்டியாளராக வாய்ப்பு கொடுத்த ஜீ தமிழ்.! 3

விளம்பரம்

பின்னர் அவரைப் பற்றிய காணொளி ஒன்று ஒளிபரப்பானது. அதில் அசாணியின் பெயரை இலங்கை பாராளுமன்றத்தில் அமைச்சர் ஒருவர் மேற்கோள் காட்டி பேசியிருந்தார். அந்த வீடியோவைப் பார்த்த நடுவர்கள் அசாணியை நிரந்தர போட்டியாளராக்க, மற்ற போட்டியாளர்களின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று கூற அனைத்து பெற்றோர்களும் எழுந்து நின்று அசாணிக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். இதனால் போட்டியில் நிரந்தரமாக இணைந்துள்ளார் அசாணி. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Zee Tamil

விளம்பரம்

Leave a Comment