நயன்தாரா இன்று தனது இரட்டை குழந்தைகளுடன் வெளியிட்ட வீடியோவால் தற்போது ரசிகர்களின் ஏமாற்றத்தில் இருக்கின்றனர். நயன்தாராவுக்கு எதிராக அவர்கள் சில கேள்விகளையும் கேட்டு வருகின்றனர். சமீபத்தில் ஓணம் பண்டிகையின் போது வெளியிட்ட புகைப்படத்திற்கும் இன்று நயன்தாரா வெளியிட்ட வீடியோவிற்கும் பல வித்தியாசங்கள் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 2005ஆம் ஆண்டு வெளியான ஐயா என்கிற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் நயன்தாரா. 20 ஆண்டுகளில் சுமார் 75 படங்களுக்கும் மேல் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் “லேடி சூப்பர் ஸ்டார்” என்கிற அந்தஸ்தையும் பெற்றிருந்தார்.

இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி சென்னையில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டைக் குழந்தைக்கு தாயானதாக அறிவித்திருந்தார் நயன்தாரா. அது மிகப்பெரிய பிரச்சினையை கிளப்பியிருந்தது. பின்னர் தாங்கள் ஐந்து வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து கொண்டோம். அதன் மூலம் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டோம் என்று விளக்கம் அளித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

மேலும் தன்னுடைய இரு மகன்களுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன், உலக் தெய்விக் என் சிவன் என்று பெயர் வைத்திருந்தார். மகன்களின் முகத்தை வெளியில் காட்டாமலேயே அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். முகத்தில் எமோஜியை வைத்து மூடியும் அல்லது முகம் தெரியாதபடி புகைப்படங்கள் எடுத்து அதை பதிவிட்டு வந்தார் நயன்தாரா. இந்த நிலையில் சமீபத்தில் ஓணம் போது தனது இரு மகன்களையும் அமர வைத்து இலையில் சாப்பாடு போட்டு பின்னால் இருந்து புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அப்போதே அதற்குள் குழந்தைகளை இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டனரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் இன்று இன்ஸ்டாகிராமில் இணைந்த நயன்தாரா நான் வந்துட்டேன்னு சொல்லு என்று சொல்லி இரட்டை குழந்தைகளை தூக்கிக் கொண்டு வருவது போல வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட போட்டோவில் குழந்தைகள் பெரிதாக இருக்கிறார்கள்? ஆனால் தற்போது கைக்குழந்தைகள் போல இருக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் சிலர் இது முன்னால் எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என்றும் கருத்துக்களை கூறி வருகின்றனர். இதற்கு நயன்தாரா விளக்கம் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.!