விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது ஆடி மாதத்திற்கு மீனாவை பிரித்து தனியாக அழைத்து வந்த நிலையில் முத்துவும் அவர்களுடனே வந்து சேர்ந்து விடுகிறார். அவரை எப்படியாவது மீண்டும் பிரித்து அவரது வீட்டிற்கே அனுப்பி விட மீனாவின் அம்மா முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால் தான் இனிமேல் தன்னுடைய வீட்டிற்கு போகப் போவதில்லை. இங்கேயே இருக்கப் போகிறேன் என்று சொல்லி குண்டைத் தூக்கி போடுகிறார் முத்து. அந்த காமெடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனது அண்ணன் மனோஜ்க்கு நிச்சயிக்கப்பட்டிருந்த மீனா மண மேடையில் அமர்ந்திருந்த நிலையில் மனோஜ் ஓடி விட்டதால் வேறு வழியில்லாமல் மீனாவை திருமணம் செய்து கொள்கிறார் முத்து. ஆரம்பத்தில் இருவரும் வேண்டா வெறுப்பாக தங்களது வாழ்க்கையை ஆரம்பித்த நிலையில், தற்போது இருவரும் இணைந்து வாழத் தொடங்கி இருக்கின்றனர். தற்போது கதைப்படி முத்துவையும் மீனாவையும் ஆடி மாதம் என்று சொல்லி ஒரு மாதம் பிரிந்து இருக்க முத்துவின் தாயார் விஜயா திட்டம் தீட்டுகிறார். இதற்காக மீனாவின் அம்மாவுக்கு போன் செய்து அவரை வரவழைத்து மீனாவை அழைத்துச் செல்லுமாறு சொல்கிறார்.

அதேபோல் மீனாவை அவரது தாயார் அழைத்துச் செல்கிறார். ஆனால் மீனாவை பிரிந்து இருக்க முடியாத பொட்டு மீனாவின் வீட்டிற்கு சென்று விடுகிறார். அவரை எப்படியாவது மீண்டும் அங்கு அனுப்பி விட வேண்டும் என்று சொல்லி மீனாவின் தயார் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால் தான் இனிமேல் அங்கு போகப்போவதில்லை, இங்கேயேத் தான் இருக்கப் போகிறேன் என்று சொல்லி முத்து கூறுகிறார். இதனால் மீனாவின் தாயார் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்று கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television