படம் நல்லா இல்லனு எவன்டா சொன்னது? பாக்ஸ் ஆபீசை அடித்து நொறுக்கும் சமந்தாவின் குஷி திரைப்படம்.!

நடிகர் விஜய் தேவார கொண்டா சமந்தா ஆகியோர் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பே வெளியான குஷி திரைப்படம் எவ்வளவு வசூலை பெற்றுள்ளது என்பதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். மூன்று நாட்களில் 100 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்துள்ளதால் படக்குழுவினர் ஏகத்துக்கும் குஷியில் இருக்கின்றனர். விஜய் தேவார கொண்டா உடன் சமந்தா முதல் முறையாக இணைந்து குஷி என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை சிவா நிர்வானா இயக்க மைத்ரேயி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகி இருந்த இந்த திரைப்படம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.

படம் நல்லா இல்லனு எவன்டா சொன்னது? பாக்ஸ் ஆபீசை அடித்து நொறுக்கும் சமந்தாவின் குஷி திரைப்படம்.! 1

விளம்பரம்

விஜய் தேவார கொண்டாவும், சமந்தாவும் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்கின்றனர். பின்னர் அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனை ஏற்படுகிறது. பின்னர் என்ன நடந்தது? என்பதை விறுவிறுப்புடன் சொன்ன கதை தான் குஷி திரைப்படம். பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வந்தாலும் மற்றொரு தரப்பினர் நெகட்டிவ் விமர்சனங்களையே கூறி வந்தனர். அலைபாயுதே படம் போலவே இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் படம் வெளியாகி மூன்று நாட்கள் நிறைவடைந்து இருக்கிறது. தமிழில் குறைவான வசூலை பெற்றிருந்த போதிலும் தெலுங்கில் இந்த படத்தை பலரும் குடும்பம் குடும்பமாக சென்று பார்த்து வருகின்றனர். சமந்தாவின் ரசிகர்கள் வெற்றியை கேக் வெட்டியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடையவை  அது விஷயமே வேற!!என்ன நடந்துச்சுனு தெரியாம தப்பா பேசிட்டு இருக்காங்க!!!அஜித்துடனான போட்டோ சர்ச்சை குறித்து மனம் திறந்த பிரஷாந்த்.

படம் நல்லா இல்லனு எவன்டா சொன்னது? பாக்ஸ் ஆபீசை அடித்து நொறுக்கும் சமந்தாவின் குஷி திரைப்படம்.! 3

விளம்பரம்

படம் ஃபிளாப் ஆகிவிட்டதாகவும் வசூலை பெறாது என்றும் திரை விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது படக்குழுவினர் படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்துள்ளனர். அதன்படி குஷி திரைப்படம் வெளியாகி மூன்றே நாட்களில் சுமார் 70.23 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள் வர இருப்பதால் படம் 100 கோடி வசூலை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சமந்தா மற்றும் விஜய் தேவார கொண்டா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment