அனிருத்-க்காக மூன்று உயர் ரக கார்களை கொண்டு வந்து நிறுத்திய கலாநிதி மாறன்.!

ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க தற்போது அனிருத்துக்கும் கலாநிதிமாறன் உயர்ரக கார் ஒன்றை வழங்கியிருக்கிறார். மூன்று கார்களை கொடுத்து தேர்ந்தெடுக்க சொல்லிய நிலையில் அனிருத் ப்ளூ நிற போர்சே காரை தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் சுமார் 600 கோடி வசூலைக் குவித்து சாதனை படைத்திருந்தது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் கலாநிதி மாறன் படத்தில் நடித்தவர்களுக்கும், முக்கிய பங்காற்றியவர்களுக்கும் பரிசுகளை வழங்கி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அனிருத்-க்காக மூன்று உயர் ரக கார்களை கொண்டு வந்து நிறுத்திய கலாநிதி மாறன்.! 1

விளம்பரம்

இரண்டு நாட்களுக்கு முன்பு ரஜினியை நேரில் சந்தித்திருந்த கலாநிதி மாறன் அவருக்கு காசோலையையும் பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 என்கிற காரையும் பரிசளித்திருந்தார். அதேபோல படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சனுக்கும் போர்சே ரக காரை பரிசாக வழங்கியிருந்தார். தொடர்ந்து படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அனிருத் மற்றும் தமன்னாவுக்கும் கார்கள் வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வந்த நிலையில் தற்போது அதையும் நிறைவேற்றிக் காட்டி இருக்கிறார் கலாநிதி மாறன்.

தொடர்புடையவை  நடிகர் சல்மான் கான் தலைக்கு விலை..! மிரட்டல் விடுத்த நபர்கள்..! அதிர்ச்சியில் பாலிவுட்...!

அனிருத்-க்காக மூன்று உயர் ரக கார்களை கொண்டு வந்து நிறுத்திய கலாநிதி மாறன்.! 3
இன்று அனிருத்தை தனது அலுவலகத்திற்கு வரவைத்த கலாநிதிமாறன் பிஎம்டபிள்யூ ரகத்தில் இரண்டு கார்களையும் போர்சே ரக காரையும் வெளியில் நிறுத்தி வைத்திருந்தார். மூன்று கார்களில் எதையாவது தேர்ந்தெடுக்குமாறு அனிருத்திடம் கூற, அனிருத் ப்ளூ கலர் போர்சே ரக காரை தேர்ந்தெடுத்தார். அந்த வீடியோவை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment