விஜய்சேதுபதி கைவிட்ட முத்தையா முரளிதரன் வாழ்க்கை படம்.! “800” ட்ரைலர் வெளியானது.!

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிய நிலையில் மற்றொரு நடிகர் அவரது பயோ பிக்கில் நடித்து முடித்துள்ளார். தற்போது 800 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. இந்த ட்ரைலரை பிரபல கிரிக்கெட் வீரராக இருக்கும் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டு இருக்கிறார். இலங்கை கிரிக்கெட் வீரர்களின முக்கிய வீரராக கருதப்படுபவர் முத்தையா முரளிதரன். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய அவரின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாகியுள்ளது. அதை குறிக்கும் வண்ணம் 800 என்று அந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. முத்தையா முரளிதரன் பிறப்பால் ஒரு தமிழர் ஆவார். தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு சென்ற அவரது குடும்பம் அங்கேயே செட்டில் ஆகிவிட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதி கைவிட்ட முத்தையா முரளிதரன் வாழ்க்கை படம்.! "800" ட்ரைலர் வெளியானது.! 1

விளம்பரம்

தற்போது இலங்கை அணிக்காக விளையாடி வருகிறார் முத்தையா முரளிதரன். ஆரம்பத்தில் இந்த படத்தில் முத்தையாவாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருந்தார். இதற்காக லுக் டெஸ்ட் எல்லாம் எடுத்து ஷூட்டிங் தொடங்கப்பட்ட நிலையில், அவர் முத்தையாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே அந்த படத்தில் இருந்து விலகி இருந்தார் விஜய் சேதுபதி. தற்போது பாலிவுட் நடிகர் மாதூர் மிட்டல் என்பவர் முத்தையா முரளிதரனாக நடிக்க எம்.எஸ் ஸ்ரீபதி என்பவர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இவர்களுடன் நாசர் வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொடர்புடையவை  இருட்டு அறையில் முரட்டு குத்து 2 ஆம் பாகத்தில் வில்ஷாலு ஷம்மு நடிக்க ஒப்பந்தம்!

விஜய்சேதுபதி கைவிட்ட முத்தையா முரளிதரன் வாழ்க்கை படம்.! "800" ட்ரைலர் வெளியானது.! 3

விளம்பரம்

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். மும்பையில் நடைபெற்ற ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பல கிரிக்கெட் வீரர்கள் பங்கெடுத்தனர். அப்போது சச்சின் டெண்டுல்கர் ஜெயசூர்யா ஆகிய இரண்டு வீரர்களும் இணைந்து இந்த படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். “தமிழன் அவ்வளவு எழுதில டீம்ல சேர முடியாது” போன்ற அரசியல் வசனங்களுடன் இந்த ட்ரைலர் வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ட்ரைலரைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Sony Music South

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment