பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது தனத்திற்காக ஒட்டுமொத்த குடும்பமும் அதிரடி முடிவை எடுத்துள்ளனர். இந்த ப்ரோமோவை பார்த்த பலருக்கும் நெகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனத்திற்கு மார்பகப் புற்றுநோய் இருந்தது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார். ஆனால் இந்த விஷயத்தை குடும்பத்தில் இருக்கும் யாரிடமும் தெரிவிக்காமல் மருமகள் அனைவரும் சென்று அறுவை சிகிச்சையை முடித்து இருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் கடைசி மருமகளாக இருக்கும் ஐஸ்வர்யா தனது youtube சேனல் கன்டென்ட்க்காக தனத்திற்கு கேன்சர் இருக்கும் விஷயத்தை ஊர் முழுவதும் சொல்லிவிட்டார். அந்த வீடியோவை பார்த்த மூர்த்திக்கு இந்த உண்மை தெரிந்து அவர் தனத்திடம் சத்தியம் செய்து கேட்க, தனம் தனக்கு கேன்சர் இருக்கும் உண்மையை ஒப்புக்கொண்டு விட்டார். இதனால் மணமுடைந்த மூர்த்தி தற்போது தூக்கம் வராமல் தவிக்கிறார். இன்று வெளியாகி உள்ள ப்ரோமோவில் அவர் தனத்திற்காக நான் கொஞ்சம் நாள் கடைக்கு வரப்போவதில்லை, தனத்தை பார்த்துக் கொண்டு வீட்டிலேயே இருக்கப் போவதாக கூறுகிறார்.

தனத்திற்கு பிடித்தது போல் சமைக்க வேண்டும் வறுத்தது, பொறித்தது என எதுவுமே சமைக்க கூடாது என்று கூறுகிறார். அதற்கு ஐஸ்வர்யா அப்போது நாம் வீட்டில் எதுவுமே வறுக்கவும் பொறிக்கவும் வேண்டாம் என்று கூறுகிறார். பின்னர் தனம் சாப்பிடுவது போன்ற உணவையே வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடுகின்றனர். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே பாச மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television